பாடல் - 11
உரையா வெந்நோய் தவிர அருள் நீள்முடியானை
வரை ஆர் மாடம் மன்னு குருகூர்ச் சடகோபன்
உரை ஏய் சொல் தொடை ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
நிரையே வல்லார் நீடு உலகத்துப் பிறவாரே.
சொல்லமுடியாத அளவுக்குக் கொடுமையான மனக்கலக்கம் என்னும் நோய் தீரும்படி அருள்கிறவன் எம்பெருமான், நீண்ட திருமுடிகொண்ட அந்தப் பெருமானை, மலைபோன்ற மாடங்கள் நிறைந்த திருக்குருகூர்ச் சடகோபன் பொருத்தமான சொற்களை மாலையாகக் கோத்து ஆயிரம் திருப்பாடல்களைப் பாடினார், அவற்றுள் இந்தப் பத்து பாடல்களையும் முறையாகக் கற்கவல்லவர்கள் நீண்ட இந்த உலகத்தில் மீண்டும் பிறக்கமாட்டார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.