பாடல் - 11
இன்பம் தலைப்பெய்து எங்கும் தழைத்த பல் ஊழிக்குத்
தன்புகழ் ஏத்தத் தனக்கு அருள் செய்த மாயனைத்
தென்குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள் இவை
ஒன்பதோடு ஒன்றுக்கும் மூ உலகும் உருகுமே.
இன்பம் பெருகும்படி எங்கும் நிறைந்திருக்கிறவர் எம்பெருமான், பல ஊழிக்காலங்களாக நிலைத்திருக்கும் அவருடைய புகழைப் பாடும்படி தென்குருகூர்ச் சடகோபனுக்கு அருள்செய்தார் அவர், அத்தகைய மாயனைப் போற்றிச் சடகோபன் பாடிய ஆயிரம் பாடல்களிலே, இந்தப் பத்து பாடல்களையும் பாடினால், அதைக்கேட்டு மூவுலகங்களும் உருகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.