நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 10

நிறைந்த குடங்கள்

செ.குளோரியான்

பாடல் 10

விதிவகை புகுந்தனர் என்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்,
நிதியும், நல் சுண்ணமும், நிறை குட விளக்கமும்
மதிமுக மடந்தையர் ஏந்தினர் வந்தே.

வேதங்களிலே கூறப்பட்ட நித்தியசூரிகள், எம்பெருமான் அடியவர்களைக் கண்டு, ‘நம்முடைய பாக்கியத்தாலே இவர்கள் இங்கே வந்தார்கள்’ என்று மகிழ்ந்தார்கள், தங்கள் இடங்களில் செய்யப்படவேண்டிய முறைப்படி அவர்களுடைய பாதங்களைக் கழுவினார்கள், சந்திரனைப்போன்ற முகத்தையுடைய பெண்கள், நிதி எனப்படும் திருவடிநிலைகள், நல்ல வாசனைப்பொடி, நிறைந்த குடங்கள், விளக்குகளை ஏந்திவந்தார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மலர்கிறேன்... ஐஸ்வர்யா மேனன்!

அலைபாயுதே... மேகா ஷுக்லா!

வசந்தம்... அதுல்யா ரவி!

ஜஸ்ட் லைக் இட்... திஷா பதானி!

”துறை சார்ந்த அமைச்சர்கள் யாரும் இதுவரை வரவில்லை!” | தொடரும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம்!

SCROLL FOR NEXT