நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 3

பிரமன், சிவன், இந்திரன்

செ.குளோரியான்

பாடல் 3

கூவிக்கொள்ளாய் வந்து, அந்தோ, என் பொல்லாக் கருமாணிக்கமே,
ஆவிக்கு ஓர் பற்றுக்கொம்பு நின் அலால் அறிகின்றிலேன் யான்,
மேவித் தொழும் பிரமன், சிவன், இந்திரன் ஆதிக்கு எல்லாம்
நாவிக் கமல முதல் கிழங்கே, உம்பர் அந்த அதுவே.

பொருந்தித் தொழுகின்ற பிரமன், சிவன், இந்திரன் முதலானோருக்கெல்லாம் தொடக்கமாக அமையும் திருநாபிக்கமலத்துக்கு இடமானவனே, வானவர்களுக்கும் அதே தன்மையாக அமைந்தவனே, என்னுடைய உயிருக்கு உன்னைத்தவிர இன்னொரு பற்றுக்கொம்பை நான் அறியேன், எம்பெருமானே, என்னுடைய துளையிடப்படாத கருமாணிக்கமே, இங்கே வந்து என்னைக் கூவிக்கொள்ளமாட்டாயா, அடடா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மலர்கிறேன்... ஐஸ்வர்யா மேனன்!

அலைபாயுதே... மேகா ஷுக்லா!

வசந்தம்... அதுல்யா ரவி!

ஜஸ்ட் லைக் இட்... திஷா பதானி!

”துறை சார்ந்த அமைச்சர்கள் யாரும் இதுவரை வரவில்லை!” | தொடரும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம்!

SCROLL FOR NEXT