நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 7

அன்பானவனே

செ.குளோரியான்

பாடல் 7

கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ,
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்ப
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்,
நீலக் கடல் கடைந்தாய், உன்னைப் பெற்று இனிப் போக்குவனோ?

அழகிய மலரிலே எழுந்தருளியிருப்பவள், திருமகளுக்கு அன்பனே, என்மீது அன்பானவனே, நீல மலையொன்று இரண்டு பிறைகளைக் கவ்விக்கொண்டு நிமிர்ந்ததைப்போல அழகிய வராக அவதாரம் எடுத்தவனே, கொம்புகளுக்கு நடுவே பூமியை ஏந்திய எங்கள் தந்தையே, நீலக் கடலைக் கடைந்தவனே, உன்னை வரமாகப் பெற்றேன், இனி விடுவேனா? (மாட்டேன்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

SCROLL FOR NEXT