நூல் அரங்கம்

புரட்சிக்காரி மாதவி

பெரியார் ஈ.வெ.ரா.வின் இயக்கம், திராவிட இயக்கத்துக்கு முன்னதாகவே சமுதாயப் புரட்சியை உண்டாக்கியவர் மாதவி. அவரை உயர்த்திக் காட்டியிருக்கும் நூல், 'புரட்சிக்காரி மாதவி'.

தினமணி செய்திச் சேவை

புரட்சிக்காரி மாதவி - புலவர் மா.நன்னன்; பக்.144; விலை ரூ. 175; மணிவாசகர் பதிப்பகம், சென்னை - 600 021. ✆ 93805 30884

பெரியார் ஈ.வெ.ரா.வின் இயக்கம், திராவிட இயக்கத்துக்கு முன்னதாகவே சமுதாயப் புரட்சியை உண்டாக்கியவர் மாதவி. அவரை உயர்த்திக் காட்டியிருக்கும் நூல், 'புரட்சிக்காரி மாதவி'.

மாதவியை புரட்சிக்காரி என்று கூறுவதற்கான சாத்தியக் கூறுகளாக இருப்பவை எவை? அவர் கணிகையாக இருந்தாலும் தனது கலை, அறிவு, அழகு ஆகியவற்றால் சமூகத்தில் உயர்ந்த இடத்தைப் பெற்றார். அரசவையில் நாட்டியமாடியது அவரின் திறமையான, சுதந்திரமான அந்தஸ்தை காட்டும். அந்தக் காலத்தில் பெண்களுக்கு குறிப்பாக, கணிகைகள் இத்தகைய அங்கீகாரத்தைப் பெறுவதே புரட்சிகரமான நடவடிக்கைதான்.

கோவலன் தன்னைவிட்டுப் பிரிந்த நிலையில், கணிகையர் வாழ்வுக்குண்டான தன்மையில் வாழாது, தவ வாழ்வு மேற்கொண்டு பெüத்த துறவியாக மாறினார். அவரது உள் மனமாற்றம், சமூகத்தின் அப்போதைய மரபுகளை உடைத்தது. இந்த மாற்றம், அவரின் மகள் மணிமேகலையின் வாழ்க்கையையும் பாதித்தது. ஏனெனில், மணிமேகலை முழுமையான பெளத்த துறவியாகி சமூக சேவையில் ஈடுபட்டார்.

மாதவியின் இந்த முடிவு தனிப்பட்ட உணர்வுகளுக்கு அப்பால், சமூக நன்மைக்காக தன்னை அர்ப்பணித்த ஒரு புரட்சிகர செயல்.

மாதவி ஒரு பயிற்சி பெற்ற பரதக் கலைஞர், இசை மற்றும் கவிதை இயற்றுவதில் வல்லவர். அவரின் கலைத் திறமைகளாலேயே அவர் அறியப்பட்டார்.

இந்த நூலில் மாதவியின் அறிமுகம், மாதவியின் எதிர்ப்பாட்டு, அவளது புரட்சியின் தொடக்கம், தனது உரிமைக்கான போராட்டம், அவருடைய பேராண்மை மற்றும் வெற்றி ஆகிய தலைப்புகளில் புதிய பரிமாணங்களில், இதுவரை யாரும் விவரிக்காத வகைகளில் மாதவியைக் காட்டியுள்ள பாங்கு பாராட்டத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன அழுத்தமா? இந்த 10 வழிகளை முயற்சி செய்யுங்கள்!

இந்தியாவில் சீன வெளியுறவு அமைச்சர்! வலுவடையும் இருநாட்டு உறவு!

மாலை மங்கும் நேரம்... திஷா பதானி!

சிவப்பு நிலா... திஷா பதானி!

டிரம்ப்புடன் பேசியது என்ன? பிரதமர் மோடியுடன் பகிர்ந்த ரஷிய அதிபர்!

SCROLL FOR NEXT