8. வெண்ணிலா மதியம் தன்னை - பாடல் 4
துருத்தி = கொல்லனின் உலையில் ஊதப்படும் பை போன்று, மூச்சுக் காற்றினை உள்ளே இழுப்பதும் வெளியே விடுவதுமாக உள்ள உடல்
துருத்தியாம் குரம்பை தன்னில் தொண்ணூற்றங்கு அறுவர் நின்று
விருத்தி தான் தருக என்று வேதனை பலவும் செய்ய
வருத்தியால் வல்லவாறு வந்து வந்து அடைய நின்ற
Advertisement
அருத்தியார்க்கு அன்பர் போலும் அதிகை வீரட்டானாரே

விளக்கம்

துருத்தி = கொல்லனின் உலையில் ஊதப்படும் பை போன்று, மூச்சுக் காற்றினை உள்ளே இழுப்பதும் வெளியே விடுவதுமாக உள்ள உடல்: முப்பத்தாறு தத்துவங்கள் மற்றும் அறுபது தாத்துவீகங்கள் ஆகியவற்றை ஒன்று சேர்த்து தொண்ணூற்றங்கு அறுவர் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். பொதுவாக இவற்றை தொண்ணூற்றாறு தத்துவங்கள் என்றும் கூறுவதுண்டு. விருத்தி தருக = தங்களது செயல்பாடுகள் பெருக வேண்டுதல்.

மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து ஞானேந்திரியங்கள், கை, கால், வாய், எருவாய் மற்றும் கருவாய் ஆகிய ஐந்து கன்மேந்திரியங்கள், நிலம், நீர், தீ, காற்று, மற்றும் ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்கள், சுவை, ஒளி, ஓசை, ஊறு, நாற்றம் ஆகிய ஐந்து தன்மாத்திரைகள் மனம், சித்தம், புத்தி மற்றும் அகங்காரம் ஆகிய நான்கு அந்தக்கரணங்கள். இந்த இருபத்து நான்கும் ஆன்ம தத்துவங்கள், என்று பொதுவாக அழைக்கப்படும். காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன் மற்றும் மாயை என்பன ஏழு அசுத்த மாயா தத்துவங்கள் ஆகும். சிவம், சக்தி, சதாசிவம், ஈசுரம் மற்றும் சுத்தவித்தை என்பன சுத்தமாயைத் தத்துவங்கள் ஆகும். இவை அனைத்தும் (24+7+5) ஒரு தொகுதியாக 36 தத்துவங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

நிலத்தின் ஐந்து உட்கூறுகள், எலும்பு, தசை, உரோமம். தோல் மற்றும் நரம்பு ஆகும். நீரின் உட்கூறுகள், சிறுநீர், இரத்தம். வியர்வை. உமிழ்நீர் மற்றும் சுக்கிலம் ஆகும். தீயின் அம்சமாக உடலில் விளங்குவன, இதயத்தில் ஏற்படும் வெப்பம், பசியினை உண்டாக்கும் உணர்வு, கண்களில் உள்ள வெப்பம், உடலில் பொதுவாக உள்ள வெப்பம் மற்றும் மண்டைக்கொதிப்பு ஆகும். ஆகாயத்தின் பத்து உட்பிரிவுகளாக அத்தி, அலம்புடை, இடைகலை, பிங்கலை, சுழுமுனை, காந்தாரி, குகுதை, சங்கினி, சிகுவை, புருடன் எனப்படும் நாடிகள் விளங்குகின்றன. காற்றின் உட்கூறுகள் பத்து (பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன்). இந்த 35 தாத்துவீகங்களும் பஞ்சபூதங்களின் உட்பிரிவுகள்.

அனைத்து வாயுக்களுக்கும் தலைவனாகிய பிராணன், இரத்த ஓட்டத்தின் மூலம் பிராண வாயுவை அனைத்து உறுப்புகளுக்கும் அளிக்கின்றது. மலக்காற்று என்று அழைக்கப்படும் அபானன், கழிவுப் பொருட்களை அகற்ற உடலுக்கு உதவுகின்றது. வியானன், மூளையையும் நரம்பு மண்டலங்களையும் செயல் படுத்துவதால் தொழிற்காற்று என்று அழைக்கப்படுகின்றது. உதானன், நாபியிலிருந்து கிளம்பி, குரல் நாண்களை அதிரவைத்து ஒலியை எழுப்புவதால் ஒலிக்காற்று என்று அழைக்கப்படுகின்றது. செரித்த உணவிலிருந்து கிட்டிய சத்துக்களை உடலின் அனைத்து பாகங்களுக்கும் சமமாக பரவச் செய்வது சமானன் ஆகும். நோய்த்தொற்று, மாசு, கிருமிகள் ஆகியவற்றை, தும்மல் மூலம் வெளியேற்றுவது நாகனின் செயலாகும். கண்களின் அசைவுக்கு துணைபுரிவதும், கண்களில் உள்ள நீர் சரியான அழுத்தத்தில் இருக்கவைப்பதும், கூர்மனின் பணியாகும். உடல் ஓய்வு எடுக்க வேண்டிய அவசியத்தை கொட்டாவி மூலம் தெரிவிப்பதும், பிராண வாயுக் குறைவினால் உடல் உறுப்புகள் அந்த மாற்றத்தை ஏற்கமுடியாமல் தவிக்கும்போது, நுரையீரலை வேகமாக இயங்கச் செய்து பிராண வாயு பற்றாக்குறையை தீர்ப்பதும் கிருகரன் என்ற வாயுவின் தொழில் ஆகும். விழிகளை பாதுகாப்பதற்காக இமைகள் இமைக்குமாறு செய்தல் தேவதத்தனின் செயல் ஆகும். உடல் இறந்த பின்னர், உடலிலிருக்கும் நுண்ணிய திசுக்களை (செல்) இயக்கமறச் செய்வதும், வெளிக்காற்று மற்றும் ஒளி உடலினுள்ளே புகுவதை தடுத்து, உடலை விறைக்கச் செய்வது தனஞ்செயனின் செயலாகும்.

சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்பன ஞானேந்திரியங்களால் விளைவன: அவ்வாறே கன்மேந்திரியங்கள் விளைவிப்பன, வசனம், கமனம், தானம், விசர்க்கம் மற்றும் ஆனந்தம் ஆகும். மனத்தின் குணங்கள், காமம், குரோதம், உலோபம். மோகம் மற்றும் மதம் எனப்படும் ஐந்தாகும். மாற்சரியம் மதத்தின் பகுதியாக கருதப்படுகின்றது. அகங்காரத்தின் மூன்று உட்பிரிவுகள், தைசதம், விகாரி மற்றும் பூதாதி ஆகும். குணத்தின் மூன்று கூறுகள், சாத்துவீகம், இராசதம் மற்றும் தாமசம் ஆகும். வாக்கின் நான்கு பிரிவுகள், சூக்குமை, பைசந்தி, மத்திமை மற்றும் வைகரி ஆகும். மேற்கண்ட இருபத்தைந்து பிரிவுகள், பஞ்ச பூதங்களின் உட்பிரிவுகள் முப்பத்தைந்துடன் சேர்ந்து மொத்தம் அறுபது தாத்துவீகங்கள் ஆகும்.

பொழிப்புரை

கொல்லனின் உலைக்களத்தில் இருக்கும் தோற்பை போன்று செயல்படும் இந்த உடலினை தொண்ணூற்றாறு தத்துவங்கள், தங்களது விருப்பம்போல் செயல்பட்டு தங்களது செயல்பாடுகள் பெருகவேண்டும் என்ற எண்ணத்தில், உடலுக்கும் உயிருக்கும் பல விதங்களிலும் வேதனை அளிக்கின்றன. அந்த வேதனைகளை பொருட்படுத்தாது, தங்களால் இயன்ற வரையில் விருப்பம் கொண்டு, சிவபிரானை நாடிச் செல்லும் அன்பர்களுக்கு, அன்பனாகத் திகழ்ந்து அவர்களுக்கு நன்மை செய்பவன், திருவதிகை நகரத்தில் உறையும் வீரட்டன் ஆவான்.