முகப்பு
தினம் ஒரு தேவாரம்

8. வெண்ணிலா மதியம் தன்னை - பாடல் 8

இரவில் உடல் தூங்கும்போது ஐந்து புலன்களும் செயலற்று இருப்பதால் நான் இறைபணி ஏதும் செய்யாது இருந்தேன்.

Updated On : 9 டிசம்பர், 2015 at 2:27 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 1:16 PM

எல்லியும் பகலும் எல்லாம் துஞ்சுவேற்கு ஒருவர் வந்து

புல்லிய மனத்துக் கோயில் புக்கனர் காமன் என்னும்

வில்லியம் கணையினானை வெந்து உக நோக்கி இட்டார்

Advertisement

அல்லியம் பழன வேலி அதிகை வீரட்டானாரே

விளக்கம்

காமனை வென்ற இறைவன் நமது மனதினில் வந்து புகுந்தால், நமக்கு காம இச்சைகள் ஏற்படாது என்பதை நமக்கு உணர்த்தும் வகையில், காமனை எரித்த இறைவன் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். துஞ்சுதல் என்றால் தூங்குதல் என்று பொருள். தூங்கும்போது நமக்கு என்ன நேரிடுகின்றது; நமது ஐந்து புலன்களும் செயல் இழக்கின்றன. நாம் விழித்திருக்கும் நிலையில் நாம் நமது ஐந்து பொறிகளை பயன்படுத்தி பல செயல்களைச் செய்கின்றோம், இறைவனைப் பற்றி பேசாத நாட்கள் எல்லாம் பிறவாத நாட்கள் என்று கருதும் மனப் பக்குவம் வாய்ந்த அப்பர் பிரான், இறைபணியில் ஈடுபடாத செயல்களை செயல்களாக கருதியதில்லை போலும். எனவே தான் இறைபணியுடன் தொடர்புகொண்ட செயல்களைச் செய்யாமல் இருந்த நிலையை, பகலிலும் தூங்கிய செயல் என்று கூறுகின்றார். தான் இறைபணியில் ஈடுபடாமல் இருந்தை பொருட்படுத்தாமல், தனது கீழ்மைத் தன்மையுடைய மனதினில் இறைவன் புகுந்ததாக மிகவும் அடக்கத்துடன் அப்பர் பிரான் சொல்லிக்கொள்கின்றார். உனக்கு தொண்டுகள் செய்வதில் நான் ஏதேனும் பிழை செய்தால் உனக்கு என்னை புளியம் விளாறால் அடித்து திருத்துவதற்கு உரிமை உள்ளது என்று கூறிய அப்பர் பிரானால் எவ்வாறு இறைபணி செய்யாமல் இருந்திருக்க முடியும். எனவே இறைபணி ஏதும் செய்யாத புன்மையான மனம் என்று கூறியது மிகவும் அடக்கத்துடன் கூறியதாகவும், நம்மைப் போன்ற மனிதர்களை குறிப்பதாகவும் நாம் கொள்ளவேண்டும்.

புல்லிய = புன்மைத் தன்மை வாய்ந்த: வெந்து உக = தீயில் வெந்து சிதறி விழ: பழனம் = வயல்:

பொழிப்புரை

இரவில் உடல் தூங்கும்போது ஐந்து புலன்களும் செயலற்று இருப்பதால் நான் இறைபணி ஏதும் செய்யாது இருந்தேன். பகல் நேரத்திலும் எனது கீழ்த்தன்மையான மனதின் கட்டுபாட்டில் மயங்கி இறைபணி ஏதும் செய்யாமல் இருந்ததால், எனது புலன்கள் தூங்கும்போது இருந்ததைப் போன்று செயலற்று இருக்கின்றன. இவ்வாறு இரவு பகல் ஆகிய இரண்டு நேரங்களிலும் இறைபணியில் ஈடுபடாமல். கீழ்மைக் குணம் கொண்ட மனத்தனாக அடியேன் இருந்தபோதிலும், அதனைப் பொருட்படுத்தாமல், எனது மனத்தினை கோயிலாக கருதி சிவபெருமான் புகுந்துள்ளார். ஐந்து விதமான கணைகளைக் கொண்டு அனைவரின் மனத்திலும் காம இச்சைகளைத் தூண்டும் மன்மதன் தீயில் வெந்து சிதறுமாறு விழித்த சிவபெருமான், எனது மனத்தினில் இருப்பதால் எனக்கு காம இச்சைகள் ஏதும் தோன்றவில்லை. இவ்வாறு நமக்கு உதவி செய்யும் சிவபெருமான், வேலிகள் கொண்ட அழகான வயல்கள் நிறைந்த பழன நகரத்தில் உறைகின்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.