9. முளைக்கதிர் இளம்பிறை - பாடல் 3
விளக்கம் தருதல்: சிவந்த மேனியராக விளங்கும் சிவபிரானின் கழுத்துப் பகுதி தெளிவாக தெரியுமாறு, பாற்கடலில்
விடம் திகழ் கெழு தரு மிடற்றர் வெள்ளை நீறு
உடம்பு அழகு எழுதுவர் முழுதும் வெண்ணிலாப்
படர்ந்து அழகு எழு தரு சடையில் பாய்புனல்
கிடந்து அழகு எழுதிய கெடில வாணரே

விளக்கம்

கெழு தருதல் = விளக்கம் தருதல்: சிவந்த மேனியராக விளங்கும் சிவபிரானின் கழுத்துப் பகுதி தெளிவாக தெரியுமாறு, பாற்கடலில் இருந்து திரண்டெழுந்த விடம், கழுத்தின் நிறத்தை கருமையாக மாற்றியது என்று இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார். இந்த மாற்றம் சிவபெருமான் பண்டைய நாளில் செய்த தியாகம், அனைவர்க்கும் உணர்த்துவதற்காக ஏற்பட்ட மாற்றம். எழுதுதல் = பூசுதல்:

பொழிப்புரை

உட்கொண்ட விடத்தால் கருநிறமாக மாற்றப்பட்டு, தெளிவாகத் தெரியும் கழுத்தினை உடையவர் சிவபெருமான்; அவரது சிவந்த உடலுக்கு, அவர் பூசியுள்ள திருநீறு மேலும் அழகு சேர்க்கின்றது; அவரது தலையில் சூடியுள்ள வெண்ணிலா ஒளி வீசி அவரது அழகுக்கு மேலும் அழகு சேர்க்க, அந்த நிலவொளியின் பின்னணியில் அவரது சடையில் அடைபட்டுள்ள கங்கை நதி அவரது சடையின் அழகினை மேலும் மேம்படுத்துகின்றது. இத்தகைய அழகு வாய்ந்த கோலத்தை உடைய கெடில வாணர், அழகே உருவாக தோற்றம் அளிக்கின்றார்.