முகப்பு
தினம் ஒரு தேவாரம்

4. மாசில் வீணையும் - பாடல் 10

அரணிக் கட்டையில் தீ இருப்பதும் பாலினில் நெய் இருப்பதும் நமது கண்களுக்கு நேரே தெரிவதில்லை. அரணிக் கட்டையை கடைந்தால் தீ ஏற்படுகின்றது.

Updated On : 23 அக்டோபர், 2015 at 3:10 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:55 PM

விறகில் தீயினன் பாலில் படு நெய் போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவுக் கோல் நட்டு உணர்வுக் கயிற்றினால்
முறுக வாங்கிக் கடைய முன் நிற்குமே

விளக்கம்

விறகு = அரணிக் கட்டை

அரணிக் கட்டையில் தீ இருப்பதும் பாலினில் நெய் இருப்பதும் நமது கண்களுக்கு நேரே தெரிவதில்லை. அரணிக் கட்டையை கடைந்தால் தீ ஏற்படுகின்றது. ஆனால் பாலினைத் தயிராக மாற்றிய பின்னர் மத்தினைக் கொண்டு அதனைக் கடைந்தால் வெண்ணெய் கிடைக்கின்றது. சாணை தீட்டப்படாத மாணிக்கக் கல் பிரகாசமாக இருப்பதில்லை. பட்டை தீட்டப்பட்ட பின்னர் மாணிக்கக் கல் மிகுந்த ஒளியுடன் பிரகாசிக்கின்றது. மேற்கண்ட பொருட்கள் போன்று இறைவனும் மறைந்து நிற்கின்றான். தகுந்த முறையில் அவனை அறிந்துகொண்டு அவனை வழிபடவேண்டும் என்று இங்கே கூறுகின்றார்.

அரணிக் கட்டை என்பது பழங்காலத்தில் தீ மூட்டுவதற்காக பயன்பட்டது. ஒரு அரணிக் கட்டையுடன் மற்றொன்றைத் தேய்த்து தீ எழுப்புதலை கடைதல் என்று கூறுவார்கள். அரணி என்ற பொருள்பட மரக்கடை தீக்கோல் என்ற தொடரும் தீக்கடைதல் என்ற சொல்லும் பெரிய புராணத்தில், கண்ணப்பர் புராணத்தில் கையாளப்பட்டுள்ளது.

காடனும் எதிரே சென்று தொழுது தீக்கடைந்து வைத்தேன்

கோடுடை ஏனம் உங்கள் குறிப்படி உறுப்பை எல்லாம்

மாடுற நோக்கிக் கொள்ளும் மறித்து நாம் போகைக்கு இன்று

நீட நீர் தாழ்த்தது என்னோ என்றலும் நின்ற நாணன்

ஆங்கதன் கரையின் பாங்கோர் அணி நிழல் கேழலிட்டு

வாங்கு வில் காடன் தன்னை மரக்கடை தீக்கோல் பண்ணி

ஈங்கு நீ நெருப்பு காண்பாய் இம்மலை ஏறிக் கண்டு

நாங்கள் வந்து அணைவோம் என்று நாணனும் தாமும் போந்தார்

காட்டினில் பாண்டவர்கள் வசித்து வந்தபோது, அவர்கள் தீ மூட்டுவதற்காக வைத்திருந்த அரணிக் கட்டையை ஒரு மான் எடுத்துக்கொண்டு ஓட, அதனைத் தேடிச் சென்று களைப்படைந்த சகாதேவன் நச்சுப் பொய்கையைக் காண்கின்றான் என்று மகாபாரதத்தில் சொல்லப்படுகின்றது.

பொழிப்புரை

சிவபிரான் அரணிக் கட்டையில் தீ போலவும், பாலினில் நெய் போலவும், சாணை பிடிக்கப்படாத மாணிக்கக் கல்லில் பிரகாசம் போலவும் நமது கண்களுக்கு புலப்படாமல் மறைந்து நிற்கின்றான். ஆனால் நமக்கும் அவனுக்கும் இடையே இருக்கும் ஆண்டவன் பக்தன் என்ற உறவாகிய மத்தினை நட்டு உணர்வு என்னும் கயிற்றினால் அந்த மத்தினை இறுக்கமாக கட்டி கடைந்தால் இறைவன் நமது முன்னே வந்து தோன்றுவான்.

முடிவுரை

ஏழு நாட்கள் சென்ற பின்னர் சமணர்களை அழைத்த மன்னவன், நீற்றறையைத் திறந்து பார்க்குமாறு உரைத்தான், சிவானந்தப் பெருக்கில் திளைத்து பதிகம் பாடிக் கொண்டு இருந்த நாவுக்கரசு அடிகள், நீற்றறையில் இருந்தாலும் தனது உடலுக்கு எந்த குறையுமின்றி, மகிழ்ச்சியுடன் இருந்ததைக் கண்ட சமணர்கள், என்ன அதிசயம் என்று முதலில் வியப்படைந்து கூறினார்கள். பின்னர் தங்களது எதிரியான நாவுக்கரசர் இறவாது பிழைத்து இருந்தது அவர் சமண சமயத்தைத் சார்ந்து இருந்தபோது கற்ற மந்திர சாதகமாகும் என்று தங்களை சமாதானம் செய்துகொண்டு, அடுத்து என்ன செய்யலாம் என்பதை ஆராயத் தொடங்கினார்கள்.

கடம்பூர் கரக்கோயிலான் தன் கடன் அடியேனையும் தாங்குதல், என் கடன் பணி செய்து கிடப்பதே என்று பின்னாளில் பாடியதற்கு ஏற்ப, சிவபிரான் பேரில் அசையாத நம்பிக்கை கொண்டு, இறைவனது பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட நாவுக்கரசரின் வாழ்க்கையில் இறைவன் நிகழ்த்திய இரண்டாவது அதிசயம். முதல் அதிசயம் சூலை நோயிலிருந்து மீட்டது.

இந்தப் பதிகத்தின் பல பாடல்களில் அப்பர் பிரான், சிவபிரானை வழிபடாதவர்களை சாடியும் இழித்தும் கூறுவதை நாம் உணரலாம். சமணர்களின் வஞ்சனையால் நீற்றறையில் இடப்பட்டார் என்பதால் அவர்கள் மீது அவருக்கு ஏற்பட்ட கோபம் மிகவும் இயற்கையே.. எனவே அத்தகைய குறிப்புகள் மிகவும் அதிகமாக காணப்படுகின்றதோ என்று எண்ணத் தோன்றுகின்றது. பின்னர் தனக்கு ஏற்பட்ட சோதனைகளை எதிர்கொண்ட போது இத்தகைய குறிப்புகள் (சுண்ண வெண் சந்தனச் சாந்தும், சொற்றுணை வேதியன் என்று தொடங்கும் பதிகங்கள்) காணப்படுவதில்லை என்பதும் நாம் அறியத் தக்கது. சிவபிரான் தன்னை எப்படியும் மீட்பார் என்ற நம்பிக்கை மேலும் வளர்ந்ததால், சமணர்கள் மீது அவருக்கு கோபம் ஏற்படவில்லை போலும். தனக்கு வரும் துன்பங்களையும் இன்பங்களையும் ஒரு சேர நோக்கும் கண்ணோட்டம் கொண்டவராக அவர் திகழ்வதை நாம் உணரலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.