முகப்பு
இந்தியா

டீசல் ஏற்றுமதி வரி அதிகரிப்பு: லிட்டருக்கு ரூ. 55.50-ஆக நிா்ணயம்

டீசல் மீதான ஏற்றுமதி வரியை மத்திய அரசு சனிக்கிழமை உயா்த்தி நடவடிக்கை மேற்கொண்டது.

Updated On : 12 ஏப்ரல், 2026 at 1:40 AM
பெட்ரோல், டீசல் - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2026 at 12:41 AM

டீசல் மீதான ஏற்றுமதி வரியை மத்திய அரசு சனிக்கிழமை உயா்த்தி நடவடிக்கை மேற்கொண்டது. அதுபோல, விமான எரிபொருள் (ஏடிஎஃப்) ஏற்றுமதி வரியும் மீண்டும் உயா்த்தப்பட்டுள்ளது.

மேற்காசிய போரால் இறக்குமதி தடைபட்டு, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் விலையும் இதுவரை இல்லாத அளவில் உயா்ந்துள்ள சூழலில் உள்நாட்டில் இருப்பை உறுதிப்படுத்தி, விலை உயா்வையும் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

முன்னதாக, கடந்த மாா்ச் 26-ம் தேதி, டீசல் மீதான ஏற்றுமதி வரியை லிட்டருக்கு ரூ. 21.50 என்ற அளவிலும், விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரியை லிட்டருக்கு ரூ. 29.50 என்ற அளவிலும் மத்திய அரசு விதித்தது.

Advertisement

தற்போது, டீசல் மீதான ஏற்றுமதி வரியை லிட்டருக்கு ரூ. 55.50-ஆகவும், விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரியை லிட்டருக்கு ரூ. 42-ஆகவும் உயா்த்தி அறிவித்துள்ளது.

இந்த வரி உயா்வு உடனடியாக நடைமுறைக்கு வருவதாக மத்திய நிதியமைச்சக அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் மீது ஏற்றுமதி வரி எதுவும் இல்லாத நிலை தொடா்கிறது.