5. சுண்ண வெண்சந்தனச் சாந்தும் - பாடல் 2
வராக அவதாரம் எடுத்த திருமாலை வென்றதின் அடையாளமாக பன்றிக் கொம்பினை தனது மார்பினிலும்,
பூண்டதோர் கேழல் எயிறும் பொன் திகழ் ஆமை புரள
நீண்ட திண்தோள் வலம் சூழ்ந்து நிலாக்கதிர் போல வெண்ணூலும்
காண் தகு புள்ளின் சிறகும் கலந்த கட்டங்கக் கொடியும்
ஈண்டு கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை

விளக்கம்

கேழல் = பன்றி, எயிறு = பல், புள் = பறவை, இங்கே கொக்கினை குறிக்கின்றது. கொக்கின் வடிவம் எடுத்து பலருக்கும் தீங்கு செய்த குரண்டாசுரன் என்ற அரக்கனை அழித்ததன் அடையாளமாக கொக்கின் இறகினை அணிந்தவர் சிவபெருமான். கட்டங்கம் = மழு,

வராக அவதாரம் எடுத்த திருமாலை வென்றதின் அடையாளமாக பன்றிக் கொம்பினை தனது மார்பினிலும், ஆமை அவதாரம் எடுத்த திருமாலை வென்றதன் அடையாளமாக ஆமை ஓட்டினையும் தனது மார்பினில் அணிந்தவர் சிவபெருமான்.

பொழிப்புரை

தனது மார்பினில் பன்றிக் கொம்பு போன்ற பல்லினை ஆபரணமாக அணிந்தவரும், தான் புனைந்து கொண்ட பொன்னின் நிறத்தினை ஒத்த ஆமை ஓட்டின் மேல் புரளுமாறும் தனது அழகிய தோள்களை வலம் வருமாறும், நிலாக்கதிர் போன்ற வெண்மையான பூணூலினை மார்பினில் அணிந்தவரும், கொக்கின் சிறகை ஆபரணமாக அணிந்தவரும், மழுவினைச் சித்திரமாக வரையப் பெற்ற கொடியினை உடையவரும் ஆகிய சிவபெருமான், இங்கே உள்ள கெடில நதிக்கரையில் அமைந்துள்ள அதிகை நகரை உடையவர் ஆவார், இத்தகைய பெருமைகள் வாய்ந்த சிவபிரானின் அடியானாகிய நான் எதற்கும் அஞ்சமாட்டேன்; எனக்கு அச்சம் விளைவிக்கக்கூடிய பொருள் இனித் தோன்றப்போவதும் இல்லை.