முகப்பு
தினம் ஒரு தேவாரம்

5. சுண்ண வெண்சந்தனச் சாந்தும் - பாடல் 3

முளைத்தெழு சூலம் = எரியப்படாமல் எப்பொழுதும் சிவபிரானது கையை விட்டு நீங்காமல் இருப்பதால்,

Updated On : 2 நவம்பர், 2015 at 5:40 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:57 PM

ஒத்த வடத்து இளநாகம் உருத்திரபட்டம் இரண்டும்
முத்து வடக் கண்டிகையும் முளைத்தெழு மூவிலை வேலும்
சித்த வடமும் அதிகைச் சேணுயர் வீரட்டம் சூழ்ந்து
தத்தும் கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை

விளக்கம்

முளைத்தெழு சூலம் = எரியப்படாமல் எப்பொழுதும் சிவபிரானது கையை விட்டு நீங்காமல் இருப்பதால், அவரது கையில் இருந்து முளைத்தது போல் தோன்றுகின்றது. மேல் பாகத்தில் மூன்று இலைகள் போன்ற அமைப்பையும் கீழே ஒரு தண்டு போன்ற அமைப்பையும் கொண்டிருப்பதால் முளைத்து எழுகின்ற சூலம் என்று கூறப்பட்டுள்ளது. சித்தமடம் = அதிகையின் புறத்தே உள்ள ஒரு மடம்.

இளநாகம் = என்றும் இளமையாக காணப்படும் பாம்பு. பாம்பு தனது தோலினை அடிக்கடி உரித்து விடுவதால் தோல் சுருங்குவதில்லை. நரை, திரை இல்லாத காரணத்தால் என்றும் இளமையாக காணப்படும். இளநாகம் என்று சம்பந்தரின் முதல் பதிகத்திலும் மற்றும் பல தேவாரப் பதிகங்களிலும் கூறப்படுகின்றது.

முத்துவடக் கண்டிகை என்பதை, முத்து மாலையும் கண்டிகையையும் அணிந்தவர் என்று விளக்கம் கூறி, முத்துமாலையினை அம்பிகைக்கு உரிய அணிகலனாகவும் உருத்திராக்க மாலையை சிவபிரானுக்கு உரிய அணியாகவும் கூறி உமையம்மையுடன் இணைந்து இருக்கும் கோலத்தை குறிப்பிடுவதாகவும் பொருள் கொள்வார்கள்.

பொழிப்புரை

தோளில் மாலையாக அணிந்த பாம்பினையும், தனது இரண்டு தோள்களிலும் உருத்திரபட்டத்தை உடையவரும், முத்து மாலை போல் வெண்மையான உருத்திராக்க கண்டிகை மாலையை உடையவரும், கையில் இருந்து முளைத்து எழுந்தது போன்று தோன்றும் மூவிலை சூலத்தை உடையவரும், சித்த வடம் என்ற மடத்தை அருகில் கொண்ட அதிகை நகரில் ஓடும் கெடில நதியைத் தனக்குத் தீர்த்தமாகக் கொண்டவரும் ஆகிய சிவபெருமானின் அடியவனாகிய ஆகிய நான் எதற்கும் அஞ்சமாட்டேன்; எனக்கு அச்சம் விளைவிக்கக் கூடிய பொருள் இனித் தோன்றப்போவதும் இல்லை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.