முகப்பு
தினம் ஒரு தேவாரம்

5. சுண்ண வெண்சந்தனச் சாந்தும் - பாடல் 4

இளமையான மான் கன்றினை தனது கையில் ஏந்தியவரும், அழகிய தோல் ஆடையினை உடையவரும்

Updated On : 2 நவம்பர், 2015 at 5:41 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:58 PM

மடமான் மறி பொற்கலையும் மழுப் பாம்பு ஒரு கையில் வீணை
குடமால் வரைய திண்தோளும் குனிசிலைக் கூத்தின் பயில்வும்
இடமால் தழுவிய பாகம் இருநிலன் ஏற்ற சுவடும்
நடமார் கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை

விளக்கம்

மடமான் = இளமான், மான்மறி = மான் கன்று, பொற்கலை = அழகிய ஆடை, குடமால் வரை = மேற்குத்திசையில் உள்ள பெரிய மலை. குனி சிலைக் கூத்து = வில்லினைப் போல் வளைந்து ஆடும் நடனம்

பொழிப்புரை

இளமையான மான் கன்றினை தனது கையில் ஏந்தியவரும், அழகிய தோல் ஆடையினை உடையவரும், ஒரு கையில் மழுப்படையும், மற்றொரு கையில் பாம்பினையும், மற்றொரு கையில் வீணையையும் ஏந்தி இருப்பவரும், மேற்குத் திசையில் காணப்படும் மலை போன்ற திண்மையான தோள்களை உடையவரும், வில் போன்று வளைந்து ஆடும் நடனம் பயில்பவரும் ஆகிய சிவபெருமான் தனது உடலின் இடது பாகத்தில் பெரிய உலகங்களைத் தானமாக ஏற்ற சுவடினை உடைய திருமாலைக் கொண்டுள்ளார். குளிர்ந்த கெடில நதியைத் தீர்த்தமாக உடைய சிவபெருமானின் அடியவனாகிய ஆகிய நான் எதற்கும் அஞ்சமாட்டேன்; எனக்கு அச்சம் விளைவிக்கக் கூடிய பொருள் இனித் தோன்றப்போவதும் இல்லை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.