5. சுண்ண வெண்சந்தனச் சாந்தும் - பாடல் 8
அரங்கிடை நூலறிவாளர் அறியப்படாததோர் கூத்து என்று ஆறாவது பாடலில் கூறிய அப்பர் பிரான்,
ஆடல் புரிந்த நிலையும் அரையில் அசைத்த அரவும்
பாடல் பயின்ற பல் பூதம் பல்லாயிரம் கொள் கருவி
நாடற்கு அரியதோர் கூத்தும் நன்குயர் வீரட்டம் சூழ்ந்து
ஓடும் கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை

விளக்கம்

அசைத்த = கட்டிய

அரங்கிடை நூலறிவாளர் அறியப்படாததோர் கூத்து என்று ஆறாவது பாடலில் கூறிய அப்பர் பிரான், இந்த பாடலில் பல்லாயிரக் கணக்கான இசைக் கருவிகள் சேர்ந்தாலும் சிவபிரானின் கூத்திற்கு இசைய வாசிக்க இயலாது என்று அவரது கூத்தின் பெருமையைக் கூறுகின்றார்.

பொழிப்புரை

எப்போதும் திருக்கூத்து ஆடிய நிலையில் விருப்பத்துடன் இருப்பவரும், தனது இடுப்பில் இறுக்கமாகக் கட்டிய பாம்பினை உடையவரும், பாடல்கள் பயின்ற பல பூதங்கள் ஆயிரக்கணக்கான கருவிகள் கொண்டும் அறியமுடியாதபடி கூத்தினை ஆட வல்லாரும், உயர்ந்த மதில்களைக் கொண்ட அதிகை வீரட்டத்தில் உள்ள கோயிலைச் சூழ்ந்து ஓடும் கெடில நதியை தீர்த்தமாக உடையவரும் ஆகிய சிவபிரானின் அடியவனாகிய ஆகிய நான் எதற்கும் அஞ்சமாட்டேன்; எனக்கு அச்சம் விளைவிக்கக் கூடிய பொருள் இனித் தோன்றப்போவதும் இல்லை