5. சுண்ண வெண்சந்தனச் சாந்தும் - பாடல் 9
இங்கே கீள் என்று மருவிவிட்டது. சம்பந்தப் பெருமான் தனது கோலக்காத் திருப்பதிகத்தில் கீள் என்று குறிப்பிடுவது இங்கே நினைவுகூரத்தக்கது.
சூழும் அரவத் துகிலும் துகில் கிழி கோவணக் கீளும்
யாழின் மொழியவள் அஞ்ச அஞ்சாது அருவரை போன்ற
வேழம் உரித்த நிலையம் விரி பொழில் வீரட்டம் சூழ்ந்த
தாழும் கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை

விளக்கம்

கீள் = அரை ஞாண் கயிறு. துணியிலிருந்து கிழிக்கப்படுவதால் கீழ் என்று அழைக்கப்படுவது. இங்கே கீள் என்று மருவிவிட்டது. சம்பந்தப் பெருமான் தனது கோலக்காத் திருப்பதிகத்தில் கீள் என்று குறிப்பிடுவது இங்கே நினைவுகூரத்தக்கது.

மடையில் வாளை பாய மாதரார்

குடையும் பொய்கை கோலக்கா உளான்

சடையும் பிறையும் சாம்பல் பூச்சும் கீள்

உடையும் கொண்ட உருவம் என்கொலோ

இந்தப் பாடலில் சிவபிரான் தாருகாவனத்து முனிவர்கள் ஏவிய யானையை உரித்த செயல் குறிப்பிடப்பட்டுள்ளது. மலை போன்ற யானை என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். தனது அடியார்களுக்காக எதனையும் செய்யவல்ல சிவபிரானின் வல்லமை இந்த தொடர் மூலம் குறிப்பிடப்பட்டு, இந்த குறிப்பு தன்னைத் தாக்க வரும் யானைக்கு, அப்பர் பிரான் ஓர் எச்சரிக்கை விடுப்பதை நாம் உணரலாம்.

பொழிப்புரை

பாம்பினால் சுற்றப்பட்ட ஆடையினை உடையவரும், துணியிலிருந்து கிழித்து எடுக்கப்பட்ட கோவணத்தையும் கீளினையும் உடையவரும், யாழைப் போன்ற மொழியினை உடைய உமையம்மை அஞ்சும் அளவுக்கு பெரிய மலை போன்று வந்த யானையையும், தான் சிறிதும் அஞ்சாமல், அதன் தோலை உரித்து வீழ்த்தியவரும், அகன்ற சோலைகள் கொண்ட அதிகை வீரட்டம் எனப்படும் தலத்தைச் சுற்றிப் பாயும் கெடில நதியினை தீர்த்தமாக உடையவரும் ஆகிய சிவபிரானின் அடியவனாகிய ஆகிய நான் எதற்கும் அஞ்சமாட்டேன்; எனக்கு அச்சம் விளைவிக்கக்கூடிய பொருள் இனி தோன்றப்போவதும் இல்லை