முகப்பு
தினம் ஒரு தேவாரம்

5. சுண்ண வெண்சந்தனச் சாந்தும் - பாடல் 10

தனது உடலின் வலிமை அனைத்தையும் திரட்டி, ராவணன் கயிலை மலையைப் பெயர்க்க முயன்றதால்,

Updated On : 2 நவம்பர், 2015 at 5:48 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 1:01 PM

நரம்பெழு கைகள் பிடித்து நங்கை நடுங்க மலையை
உரங்கள் எல்லாம் கொண்டு எடுத்தான் ஒன்பதும் ஒன்றும் அலற
வரங்கள் கொடுத்து அருள் செய்வான் வளர் பொழில் வீரட்டம் சூழ்ந்து
நிரம்பு கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை

விளக்கம்

தனது உடலின் வலிமை அனைத்தையும் திரட்டி, ராவணன் கயிலை மலையைப் பெயர்க்க முயன்றதால், அவனது உடலில் நரம்புகள் புடைத்து எழுந்த நிலையில் அப்போது இருந்தன. ஒன்பதும் ஒன்றும் = பத்து தலைகள்

பொழிப்புரை

கயிலை மலையில் சிவபிரானுடன் அமைந்திருந்த உமையம்மை பயத்தால் நடுங்குமாறு, தனது கைகளில் உள்ள நரம்புகள் புடைத்து எழ, தனது வலிமை அனைத்தையும் ஒன்று திரட்டி கயிலை மலையினைப் பெயர்த்த இராவணனது பத்துத் தலைகளும் கதறுமாறு, அவனை மலையின் கீழ் அழுந்துமாறுச் செய்தவரும், பின்னர் அவன் பாடிய சாமகானம் கேட்டு மகிழ்ந்து அவனுக்கு அருள் செய்தவரும், வளர்கின்ற சோலைகளை உடைய அதிகை வீரட்டத்தைச் சூழ்ந்து ஓடும் கெடில நதியினை தீர்த்தமாக உடையவரும் ஆகிய சிவபிரானது அடியவனாகிய ஆகிய நான் நான் எதற்கும் அஞ்சமாட்டேன்; எனக்கு அச்சம் விளைவிக்கக் கூடிய பொருள் இனித் தோன்றப்போவதும் இல்லை. சிவபெருமான் வீரச்செயல்கள் புரிந்த இடங்கள் வீரஸ்தானம் என்று வடமொழியில் அழைக்கப்படுகின்றன. வீரஸ்தானம் என்ற அச்சொல் வீரட்டானம் என்று தமிழில் மாற்றப்பட்டு, மேலும் சுருக்கப்பட்டு வீரட்டம் என்று தேவாரப் பதிகங்களில் குறிக்கப்படுகின்றது.

முடிவுரை

இந்த நிகழ்ச்சியில் அப்பர் பிரான் பெற்ற அனுபவம் அவரை பின்னாளில், மலை புரண்டு வந்து வீழினும் கலங்காமல் இருக்கவேண்டும் என்று மற்றவர்களுக்கு அறிவுரை வழங்க காரணமாக இருந்ததோ என்று நாம் நினைக்கத் தோன்றும் ஒரு குறுந்தொகை பதிகத்தின் ஒரு பாடல் (பதிக எண்: 5.91) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. கொலை செய் யானை என்பதற்கு கொல்லும் தன்மையுடைய ஐந்து புலன்கள் என்று பொருள் கூறுவார்கள். பாடலின் இறுதி அடியில் உள்ள ஏகாரம் எதிர்மறைப் பொருள் பட உள்ளது.

மலையே வந்து வீழினும் மனிதர்காள்

நிலையில் நின்று கலங்க பெறுதிரேல்

தலைவனாகிய ஈசன் தமர்களைக்

கொலைசெய் யானை தான் கொன்றிடுகிற்குமே

அப்பர் பிரானின் அருகில் வந்த யானை, அவரைத் தனது கால்களால் இடறித் தள்ளுவதற்கு பதிலாக அவரை மும்முறை வலம் வந்த பின்னர் அவர் முன்னே நிலத்தில் தாழ்ந்து வணங்கி திரும்பியது. இந்த அதிசயத்தை விளக்கும் பெரிய புராணப் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. அனைவரிடத்தும் அன்பு பாராட்டியவர் அப்பர் பிரான் என்பதால், அன்புறு கொள்கைத் தொண்டர் என்று அவரைச் சிறப்பித்து சேக்கிழார் கூறுகின்றார்.

தண்டமிழ் மாலைகள் பாடித் தம் பெருமான் சரணாகக்

கொண்ட கருத்தில் இருந்து குலாவிய அன்புறு கொள்கை

தொண்டரை முன் வலமாகச் சூழ்ந்து எதிர் தாழ்ந்து நிலத்தில்

எண்டிசையோர்களும் காண இறைஞ்சி எழுந்தது வேழம்

நடந்ததை கண்ணுற்ற யானைப்பாகன், தனது கையில் இருந்த அங்குசத்தால் யானையின் மத்தகத்தில் குத்தி, யானையை மறுபடியும் அப்பர் பிரானின் மேல் ஏவினான். ஆனால் யானையோ, அவனது சொல்லைக் கேட்கவில்லை. அதற்கு மாறாக, பாகனை வீசி எறிந்து கொன்றது. நடப்பது என்ன என்பதை ஆவலுடன் வேடிக்கை பார்க்க வந்திருந்த சில சமணர்களையும் யானை தனது காலால் மிதித்து கொல்லவே, எஞ்சிய சமணர்கள் தப்பிப் பிழைப்பதற்காக ஓடினார்கள்.

அவர்கள் மன்னனிடம் சென்று, தனது மந்திர சாதகத்தால்தான் தப்பியதும் அல்லாமல், மற்றார்களை யானையின் மூலம் கொன்று மன்னனின் புகழுக்கு பங்கம் விளைத்த தருமசேனரை, கல்லுடன் சேர்த்துக் கயிற்றால் கட்டி கடலில் வீசி எறிதல்தான் சரியான தண்டனை என்று மன்னனிடம் கூறவே மன்னனும் அதற்கு அனுமதி அளித்தான். இறைவன் அருளால் அந்த சோதனையிலிருந்தும் அப்பர் பிரான் காப்பாற்றப்படுகின்றார். கடலில், கல்லுடன் பிணைத்த நிலையில் தள்ளிவிடப்பட்ட அப்பர் பிரான், எவ்வாறு சிவபெருமானால் காப்பாற்றப்பட்டார் என்பதையும், அந்த சூழ்நிலையில் அவர் அருளிய நமச்சிவாயப் பதிகத்தின் பொருளையும், நாம் இந்த தொகுப்பின் முதல் பாடலாக சிந்தித்து மகிழ்ந்தோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.