முகப்பு
தினம் ஒரு தேவாரம்

6. ஈன்றாளுமாய் எனக்கு - பாடல் 3

விடையான் = நந்தியை வாகனமாகக்கொண்ட சிவபெருமான். அடியார்க்கடியேன் என்ற பொருளில் அடியார் அடியோம் என்று தன்னைக் குறிப்பிடுவது,

Updated On : 4 நவம்பர், 2015 at 1:02 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 1:02 PM

விடையான் விரும்பி என் உள்ளத்து இருந்தான் இனி நமக்கு இங்கு
அடையா அவலம் அருவினை சாரா நமனை அஞ்சோம்
புடையார் கமலத்து அயன் போல்பவர் பாதிரிப்புலியூர்
உடையான் அடியார் அடியோங்கட்கு அரியது உண்டோ

விளக்கம்

விடையான் = நந்தியை வாகனமாகக்கொண்ட சிவபெருமான். அடியார்க்கடியேன் என்ற பொருளில் அடியார் அடியோம் என்று தன்னைக் குறிப்பிடுவது, சுந்தரரின் தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என்று தொடங்கும் திருத்தொண்டத் தொகைப் பதிகத்தை நினைவூட்டும். சுந்தரர் தன்னை அடியார்களுக்கு அடியேன் என்று குறிப்பிட்டு அடியார்களின் புகழை மேம்படுத்துவதுபோல், அப்பர் பிரானும் இங்கே கூறுகின்றார். அடியார்கள் எந்த நிலையில் இருந்தாலும் அவர்கள் தான் தொழும் தெய்வம் என்று கூறும் அப்பர் வாக்கினை கீழ்க்கண்ட பாடலில் நாம் காணலாம். தொழுநோயால் வருந்தும் புலையராக (பசுவின் தோலை உரித்து உண்போர்) இருந்தாலும், சிவபெருமானின் தொண்டராக இருந்தால் அவரைத் தான் வணங்குவேன் என்று இந்த பாடலில் (6.95.10) அப்பர் பிரான் கூறுகின்றார்.

சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து தரணியொடு வான் ஆளத் தருவரேனும்
மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம் மாதேவர்க்கு ஏகாந்தர் அல்லார் ஆகில்
அங்கமெல்லாம் குறைந்து அழுகு தொழுநோயராய் ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்
கங்கை வார்சடைக் கரந்தார்க்கு அன்பர் ஆகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே

சம்பந்தப் பெருமானும் சிவபெருமானை வழிபடுபவர்களை தனது தலை மேல் கொள்ளத் தக்கவர்களாக கருதும் ஒரு பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது (இரண்டாம் திருமுறை, பதிகம் 12 பாடல் 4)

தூயானைத் தூயவாய் மறை ஓதிய

வாயானை வாளரக்கன் வலி வாட்டிய

தீயானைத் தீதில் கச்சித் திருவேகம்பம்

மேயானை மேவுவார் என் தலை மேலாரே

அயன் = பிரமன். அயன் போல்பவர்=மறையோர். மறையோர்களை பிரமன் போன்றவர் என்று பல தேவாரப் பதிகங்களில் குறிப்பிட்டுள்ளனர். பிரமனை வேதங்களில் வல்லவராகவும், படைப்புத் தொழிலில் ஈடுபடும்போது வேதத்தினை படிப்பவராகவும் கருதுவார்கள். எனவே நன்றாக வேதத்தினைக் கற்றுத் தேர்ந்த அந்தணர்களை பிரமனைப் போன்றவர்கள் என்று சொல்வதுண்டு. சம்பந்தப் பெருமானின் முதல் திருமுறைப் பதிகத்தின் (தலம் புளமங்கை) முதல் பாடலில் (1.16.1) மறையோர்களை பிரமன்போல் திறன் படைத்தவர் என்று குறிப்பிடுகின்றார். பாலில் மறைந்து இருக்கும் வெண்ணெய்த் திரள் போன்றவரும், காலனின் வலிமை முழுவதையும் தனது காலால் உதைத்து அழித்தவரும், வேதப் புலமையில் பிரமன் போன்று திறமை படைத்த அந்தணர்கள் வாழும் சோலைகள் நிறைந்த புளமங்கை என்ற தலத்தில் உள்ள ஆலந்துறை என்ற கோயிலில் உறைபவரும் ஆகிய சிவபிரானைத் தொழுபவரை வினைகள் சென்று அடையா.

பால் உந்து உறு திரள் ஆயின பரமன் பிரமன் தான்
போலும் திறல் அவர் வாழ் தரு பொழில் சூழ் புளமங்கைக்
காலன் திறல் அறச் சாடிய கடவுள் இடம் கருதில்
ஆலந்துறை தொழுவார் தமை அடையா வினை தானே

பாலைக் (அதாவது பாலிலிருந்து கிடைக்கும் மோரைக்) கடைந்தால் மிதந்து வரும் வெண்ணெய்த் திரள் போன்றவர் சிவபிரான் என்று சம்பந்தப் பெருமான் கூறுவது, நமக்கு அப்பர் பிரானின் விறகில் தீயினன் என்ற பாடலை (மாசில் வீணையும் என்று தொடங்கும் பதிகத்தின் கடைப்பாடல்-5.90.10) நினைவூட்டும். அந்த பாடலில் விறகில் தீ போலவும், பாலில் நெய் போலவும் மறைந்து நிற்கும் சிவபிரானை, அவனது அடியான் என்ற உறவுக் கோலை நட்டு, பக்தி என்ற உணர்வுக் கயிற்றினைச் கோலுடன் சுற்றிக் கடைந்தால், நாம் கடைந்தால் இறைவனை காண முடியும் என்று அப்பர் பிரான் கூறுகின்றார்.

விறகில் தீயினன் பாலில் படுநெய் போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவுக் கோல் கொண்டு உணர்வுக் கயிற்றினால்
முறுக வாங்கிக் கடைய முன் நிற்குமே

நீர் வளம் நிறைந்த பாதிரிப்புலியூரில் உள்ள குளங்களில் மலர்ந்து காணப்படும் தாமரை மலரைக் காணும் அப்பர் பிரானுக்கு, பிரமனும், அவனைப் போல் வேதங்களில் திறமை பெற்ற அந்தணர்களும், நினைவுக்கு வருகின்றனர். நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் என்று தனது நிலை குறித்து பாடிய அப்பர் பிரான், இங்கே தன்னைப் போன்ற அடியார்கள் இயமனுக்கு அஞ்ச வேண்டியதில்லை என்று பாடுகின்றார்.

பொழிப்புரை

நந்தியை வாகனமாக உடைய சிவபெருமான் எனது உள்ளத்தினில் இருக்கின்றான். எனவே அவனது அடியார்களாகிய எங்களுக்கு துயரங்கள் கிடையாது; தீவினைகள் வந்து சேராது; நாங்கள் இயமனுக்கு அஞ்சமாட்டோம். பிரமனைப் போன்று வேதங்களில் திறமை பெற்ற அந்தணர்கள் வாழ்வதும், தாமரை மலர்கள் நிறைந்த நீர் நிலைகள் கொண்டதும் ஆகிய திருப்பாதிரிப்புலியூர் தலத்தில் உறையும் சிவபிரானின் அடியார்களுக்குத் தொண்டர்களாகிய எங்களால் செய்ய முடியாத அரிய செயல் ஏதும் இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.