7. வெறிவிரவு கூவிள - பாடல் 4
ஆகாயம்; பதிகத்தின் முதல் பாடலில் அதியரைய மங்கை என்று குறிப்பிடும் அப்பர் பிரான்,
மந்திரமும் மறைப் பொருளும் ஆனான் தன்னை மதியமும் ஞாயிறும் காற்றும் தீயும்
அந்தரமும் அலை கடலும் ஆனான் தன்னை அதியரைய மங்கை அமர்ந்தான் தன்னைக்
கந்தருவம் செய்து இருவர் கழல் கை கூப்பிக் கடிமலர்கள் பல தூவிக் காலை மாலை
இந்திரனும் வானவரும் தொழச் செல்வானை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தவாறே

விளக்கம்

அந்தரம் = ஆகாயம்; பதிகத்தின் முதல் பாடலில் அதியரைய மங்கை என்று குறிப்பிடும் அப்பர் பிரான், இந்த பாடலிலும் குறிப்பிடுவதால், அதிகை தலத்தைத் தான் அதியரைய மங்கை என்று குறிப்பிடுகின்றார் என்று தோன்றுகின்றது. சில பெரியோர்கள், அதியரைய மங்கை என்பது அதிகையிலிருந்து வேறுபட்ட தலம் என்று கூறுகின்றனர். கந்தருவம் = பாடல்: கந்தருவம் செய்து இருவர் என்பதற்கு இரண்டு விதமாக பொருள் கூறப்படுகின்றது. அசுவதரன், கம்பளன் (ஆகா, ஊகூ என்றும் இவர்களது பெயர்கள் கூறப்படுகின்றது) சிவபெருமானை புகழ்ந்து இசைப் பாடல்கள் எப்போதும் பாட வேண்டும் என்ற விருப்பத்தினால், பெருமானது காதுகளில் குழையாக இருந்தவாறு பாடிக்கொண்டு இருக்கின்றார்கள் என்று நம்பப்படுகின்றது. பல தேவாரப் பாடல்களில் இருவரும் தேடியும் காணமுடியாத பெருமான் என்றும், இருவரும் வணங்கிய பெருமான் என்றும் திருமாலும் பிரமனும் குறிப்பிடப்படுவதால், இருவர் என்று இங்கே பிரமனையும் திருமாலையும் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார் என்றும் கூறுவார்கள். கந்தருவம் என்று இசைப் பாடல்களுடன் இணைத்து இருவர் என்று கூறுவதால், இரண்டு கந்தர்வர்களை குறிப்பதாக கொள்வது மிகவும் பொருத்தமாக உள்ளது. ஐந்து பூதங்களில், நான்கினை குறிப்பிடுவதால், ஐந்தாவதாகிய நிலத்தையும் குறிப்பிடுவதாக நாம் கொள்ளவேண்டும். மேலும் அட்ட மூர்த்தமாகிய பஞ்சபூதங்கள், சூரியன் சந்திரன் ஆகியவை இடம் பெறுவதால் முழுமை கருதி, ஆன்மாவையும் நாம் இங்கே சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த பாடலில் அட்ட மூர்த்தங்களில் ஆறு மூர்த்தங்களை குறிப்பிட்டு, நிலத்தினையும் ஆன்மாவையும் விடுத்ததற்கு வேறு விதமாகவும் விளக்கம் சொல்லப்படுகின்றது. அதியரைய மங்கை என்று தலத்தினை குறித்ததன் மூலம் நிலத்தையும், பெருமானை வழிபடும் கந்தருவர்கள் மற்றும் இந்திரன் முதலான தேவர்களை குறிப்பிடுவதன் மூலம் ஆன்மாவினையும் இங்கே அப்பர் பிரான் உணர்த்தியுள்ளார் என்று விளக்கம் கூறப்படுகின்றது.

பொழிப்புரை

வேதத்தின் மந்திரங்களாகவும் வேதத்தின் பொருளாகவும் உள்ளவனும், சந்திரன் சூரியன், காற்று, தீ, ஆகாயம், கடல் (நீர்), பூமி, அனைத்து உயிர்கள் ஆகிய எட்டு பொருட்களின் உள்ளே நின்று அவைகளை இயக்குபவனாகவும், அதியரையமங்கை என்ற தலத்தில் உறைபவனும், அசுவதரன் மற்றும் கம்பளன் என்று அழைக்கப்படும் கந்தருவர்களால், எப்போதும் இசைப் பாடல்கள் பாடப்பட்டு வணங்கப்படுபவனும், தினமும் காலையிலும் மாலையிலும் நறுமணம் மிகுத்த மலர்களைத் தூவி இந்திரன் உட்பட அனைத்து தேவர்களால் வணங்க அவர்களுக்கு காட்சி அளிப்பவனும் ஆகிய சிவபெருமானின் பெருமையை உணராமல், பண்டைய நாளில் அடியேன் அவரை இகழ்ந்தது என்னே.