3. நாமார்க்கும் குடியல்லோம் - பாடல் 8
ஓரிடத்தில் அமர்ந்து உணவு உட்கொண்டால், அந்த இடத்திற்குத் தான் உரிமை கொண்டாடுவது போலாகும் என்பதால்,
ஈசனை எவ்வுலகினுக்கும் இறைவன் தன்னை இமையவர் தம் பெருமானை எரியாய் மிக்க
தேசனைச் செம்மேனி வெண் நீற்றானைச் சிலம்பரையன் பொற்பாவை நலம் செய்கின்ற
நேசனை நித்தலும் நினையப் பெற்றோம் நின்றுண்பார் எம்மை நினையச் சொன்ன
வாசகம் எல்லாம் மறந்தோம் அன்றே வந்தீர் ஆர் மன்னவன் ஆவான் தான் ஆரே

விளக்கம்

நலம் செய்தல் = காதலித்தல்

நேசன் = அன்புடையவன்; ஈசன் என்ற சொல்லுக்கு ஆள்பவன் என்று பொருள்.

சிலம்பரையன் = மலையரசன்

ஓரிடத்தில் அமர்ந்து உணவு உட்கொண்டால், அந்த இடத்திற்குத் தான் உரிமை கொண்டாடுவது போலாகும் என்பதால், எந்த இடத்திலும் அமர்ந்து உணவு உட்கொள்ளாமல், நின்றே உணவு உட்கொள்வது சமண சமயக் கொள்கை. நீர் யார் உமது மன்னவன் யார் என்று கூறுவதன் மூலம், தனக்கும் பல்லவ நாட்டிற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதை இங்கே உணர்த்துகின்றார். சமணர்களை விட்டு அகன்று திருவதிகை சென்ற அன்றே தனது சூலை நோய் தீர்ந்தது என்று இதே பதிகத்தின் ஐந்தாவது பாடலில் கூறிய அப்பர் பிரான், தான் சமணர்களை விட்டு அகன்ற நாளிலேயே, தான் சமண சமயத்தில் கற்றவை அனைத்தையும் மறந்ததாக கூறுகின்றார். சிவபெருமானின் அடியவர்களே தன்னை உடையவர்கள் என்று இதே பதிகத்தின் ஆறாவது பாடலில் குறிப்பிடும் அப்பர் பிரான், மற்றவர்களுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை உணர்த்தும் வகையில், தன்னை மன்னனிடம் அழைத்துச் செல்ல வந்தவர்களை நீங்கள் யார் என்று கேட்பதை நாம் உணரலாம். மேலும் சிவபெருமானுக்கு மீளா அடிமையாக மாறிய அப்பர் பிரான் வேறு எவரையும், தனது தலைவராக கருதாமையால், மன்னன் யார் என்று வினவுவதையும் நாம் இந்த பாடலில் காணலாம்.

பொழிப்புரை

அனைத்து உலகையும் ஆள்பவனாகிய ஈசனும், அனைவர்க்கும் இறைவனும், தேவர்கள் தலைவனும், நெருப்புப் பிழம்பு போன்று ஒளிரும் தன்மை உடையவனும், தனது சிவந்த மேனியில் வெண்ணீற்றைப் பூசியவனும், மலையரசனாகிய இமவானின் மகளால் காதலிக்கப் படுவானும், இமவான் மகளின் மீது மிகுந்த அன்புடையவனும் ஆகிய சிவபெருமானை யாம் தினமும் நினைக்கும் பேறு பெற்றுள்ளோம். ஆகையால், நின்று உணவு உட்கொள்ளும் பழக்கம் உடைய சமணர்கள் எமக்கு அறிவுறுத்திய சொற்கள் அனைத்தையும் சமணர்களை விட்டு அகன்ற அன்றே மறந்தோம்; இத்தகைய நிலையில் வாழும் எம்மிடம் வந்த நீவிர் யார்? மன்னவன் என்று நீங்கள் குறிப்பிடும் மன்னவன் யார்?