4. மாசில் வீணையும் - பாடல் 3
இந்தப் பாடலிலிருந்து தொடர்ந்து வரும் ஐந்து பாடல்களும் உலகத்தாரை நோக்கி தனது கருத்தினை அப்பர் பிரான் தெரிவிக்கும் பாடல்களாகும்.
ஆளாகார் ஆளானாரை அடைந்து உய்யார்
மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்
தோளாத சுரையோ தொழும்பர் செவி
Advertisement
வாளா மாய்ந்து மண்ணாகிக் கழிவரே

விளக்கம்

ஆளாதல் = சிவபிரானுக்கு அடியவராக இருத்தல்

மீளா ஆள் = என்றும் மாறாத அடிமைத் திறம்

மெய்ம்மை = உண்மையான பரம்பொருள்

தோளாத = உட்குழி இடப்படாத சுரைக் குடுக்கை

தொழும்பர் = அடிமை, இங்கே அடிமை நிலையில் இருக்கும் இழிந்தவர் என்ற பொருளில் வருகின்றது

வாளா = பயன் அற்று, வீணாக

கழிதல் = இறத்தல்.

இந்தப் பாடலிலிருந்து தொடர்ந்து வரும் ஐந்து பாடல்களும் உலகத்தாரை நோக்கி தனது கருத்தினை அப்பர் பிரான் தெரிவிக்கும் பாடல்களாகும்.

அறிவில் முழு வளர்ச்சி அடைந்து தனது காலில் நிற்கும் திறமை பெற்ற மனிதனை ஆள் என்று அழைக்கின்றோம். அப்பர் பிரான் சிவபிரானின் தொண்டர்கள் அல்லாதவரை ஆள் என்று கருதவில்லை என்றும் நாம் பொருள் கொள்ளலாம். இறைவனிடம் நாம் கொண்டுள்ள அடிமைத்திறம் நமது வாழ்நாள் முழுவதும், அதனின்று மீளாமல் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்ததால் தான் சுந்தரர் தன்னை மீளா அடிமை என்று திருவாரூர் பதிகத்தில் (7.95) சொல்லிக் கொள்கின்றார்.

மீளா அடிமை உமக்கே ஆளாய் பிறரை வேண்டாதே
மூளாத் தீ போல் உள்ளே கனன்று முகத்தால் மிக வாடி
ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்
வாளாங்கு இருப்பீர் திருவாரூரீர் வாழ்ந்து போதீரே

மேலே குறிப்பிட்ட பாடலில், மற்ற தெய்வங்களைத் தான் வேண்டாது இருந்த நிலையினையும், தனக்கு எத்தனை இடர்கள் வந்த போதிலும் சிவபெருமானுக்கு அடிமையாக இருந்த தனது நிலையிலிருந்து தான் மீலாது இருந்த தன்மையையும் சுந்தரர் கூறுகின்றார். தனது கண்பார்வையை இறைவன் பறித்ததால் தனது நெஞ்சம் மிகவும் வருந்துவதையும், அதனால் முகம் மிகும் வாடி இருப்பதையும் கூறும் சுந்தரர், தான் ஏதும் கூறாமலே சிவபிரான் தனது வருத்தத்தின் காரணத்தை புரிந்துகொண்டு ஆவன செய்திருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்த்ததால் (தோழமை நிமித்தம்) தான் தனது குறையை சொன்ன பின்னரும் சிவபிரான் ஏதும் செய்யாமல் இருந்த நிலை சுந்தரரை மிகவும் கோபம் கொள்ளச் செய்கின்றது போலும்.

இந்த நிலை இன்றும் நிலவுவதை நாம் உலகினில் காண்கின்றோம், உணருகின்றோம். நமக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்ற நம்பிக்கையுடன், நாம் உதவிக்காக ஒருவரை அணுகும்போது, நமக்கு உதவக்கூடிய நிலையில் இருந்தும் அவர் நமக்கு உதவி செய்ய மறுத்தாலோ, தாமதம் செய்தாலோ, நாம் அவர் பால் கோபம் கொண்டு, நீர் எனக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, நன்றாக வாழுங்கள் என்று நாம் பல சமயங்களில் கூறுகின்றோம். இதே மன நிலையில் இருந்த சுந்தரர், சிவபெருமானை, எமக்கு உதவி செய்யாத நீர் வாழ்ந்து போதீரே என்று சொல்கின்றார்.

பட்டி என்ற சொல்லுக்கு மீளா அடிமை என்று பொருள். சோற்றுத்துறை மீது அருளிய பதிகத்தின் ஒரு பாடலில் (5.33.3) தனது நெஞ்சத்திற்கு, பட்டியாய் சிவபெருமானுக்கு பணி செய் மட நெஞ்சமே என்று அப்பர் பிரான் கூறுகின்றார். இது நமக்கு உணர்த்தும் அறிவுரையாகும். தனது நெஞ்சத்திற்கு சொல்வது போல் நமக்கு அறிவுரை கூறுவது அப்பர் பிரானின் பாணி. நமது உயிருடன் ஒட்டி இருக்கும் பிறவிப்பிணி எனப்படும் நோயினையும் உயிருடன் பிணைந்து இருக்கும் வினைகளையும், நாம் கழிக்க வேண்டும் என்று விரும்பினால், பெருமானின் திருவடிகளை மனதினால் தொட்டு இறைவனுக்கு அடிமையாக மாறி அவனுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்று அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார்.

ஒட்டி நின்ற உடலுறு நோய் வினை
கட்டி நின்ற கழிந்து அவை போயறத்
தொட்டு நின்றும் அச் சோற்றுத்துறையர்க்கே
பட்டியாய் பணி செய் மட நெஞ்சமே

சிவபிரான் ஒருவரைத் தவிர உலகத்தில் தோன்றும் அனைத்துப் பொருட்களும், மாயையின் வண்ணமே; அந்த பொருட்களைப் போல் நமது உடலும் நிலையானதன்று. சிவபிரான் ஒருவரே நிலையான, உண்மையான பொருள் என்பதால் அவரை மெய்ப்பொருள் என்று இங்கே குறிப்பிடுகின்றார்.

மானிட வாழ்க்கையின் பயன், சிவபெருமானை வழிபட்டு, அவரது அருளின் உதவியால் உலக மாயைகளிலிருந்து விடுபட்டு வீடுபேற்றினை அடைவதாகும். சிவபிரானை வழிபடாவிடில் வீடுபேறு கிடைக்காது; எனவே சிவபிரானை வழிபடாதவர்களின் வாழ்க்கை பயன் ஏதும் இல்லாமல் போகின்றது. நமக்கு வாய்த்த மனிதப் பிறவியை எவ்வாறு மதித்து நாம் வாழ வேண்டும் என்று அப்பர் பிரான் கருநட்ட கண்டனை என்று தொடங்கும் பதிகத்தில் குறிப்பிடுகின்றார். இந்தப் பாடலில் (4.81.5) தில்லைச் சிற்றம்பலவனுக்கு நாம் அடிமையாக வாழ்வது நமது கடமை என்றும் அவ்வாறு வாழ்வதே நமது வாழ்க்கையை நாம் மதிக்கும் விதமாகும் என்றும் இங்கே கூறுகின்றார்.

வாய்த்தது நம் தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்

பார்த்தர்க்குப் பாசுபதம் அன்று அருள் செய்தவன் பத்தருள்ளீர்

கோத்தன்று முப்புரம் தீவளைத்தான் தில்லை அம்பலத்துக்

கூத்தனுக்கு ஆட்பட்டு இருப்பது அன்றோ நம் தம் கூழைமையே

பொழிப்புரை

சிவபிரானின் அடியாராக இல்லாதவர்கள், சிவபிரானின் அடியார்களை அணுகி அவர்களிடமிருந்து உய்யும் வழியினை அறிந்து கொண்டு அந்த வழியில் செல்ல மாட்டார்கள்; அவர்கள் சிவபிரானுக்கு மீளா அடிமையாக இருந்து மெய்ப்பொருளை உணர மாட்டார்கள்: அவர்களது செவிகள் உட்குழி இல்லாத காரணத்தால் அவர்கள் சிவபிரானின் நாமத்தை கேட்டிலர் போலும்; அவர்களின் வாழ்க்கை எந்த பயனையும் அடையாமல் வீணாக கழிகின்றது.