4. மாசில் வீணையும் - பாடல் 6
இறைவன் நமக்கு கொடுக்கப்பட்டுள்ள ஐம்பொறிகள், அவனைப் பற்றிய உண்மையை நாம் அவைகள் மூலம் அறிந்துகொண்டு, உண்மையான
குறிகளும் அடையாளமும் கோயிலும்
நெறிகளும் அவர் நின்றதோர் நேர்மையும்
அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும்
Advertisement
பொறி இலீர் மனம் என் கொல் புகாததே
விளக்கம்

குறிகள் = கடவுளைக் குறிக்கும் திருவுருவங்கள்

அடையாளம் = சின்னங்கள்

நெறிகள் = சமய நெறிகள், சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய மார்க்கங்கள் என்றும் குறிப்பதுண்டு

நேர்மை = நடுநிலைமை

ஆரணம் = வேதங்களில் கூறியுள்ள உபதேசங்கள்

பொறி = மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகள். இங்கே ஐம்பொறிகளால் அறியும் அறிவுத் திறன்.

இறைவன் நமக்கு கொடுக்கப்பட்டுள்ள ஐம்பொறிகள், அவனைப் பற்றிய உண்மையை நாம் அவைகள் மூலம் அறிந்துகொண்டு, உண்மையான மெய்ப்பொருளாகிய சிவபிரானை நாம் உணர்ந்து, நாம் உய்யும் வழியை பின்பற்றுவதற்காகத்தான். இதனை அறியாமல் நாம் இருந்தால், இறைவன் கொடுத்துள்ள ஐம்பொறிகளும் இருந்தும் பயன் ஏதும் இல்லாமல் இருப்பதால், பொறிகள் மூலம் இறைவனை அறிந்துகொள்ளாதவர்களை பொறிகள் இல்லாதவர் என்று பொறியிலீர் என்ற சொல் மூலம் அப்பர் பிரான் இங்கே குறிக்கின்றார்.

பொழிப்புரை

சிவபிரானின் திருவுருவங்கள், அவனை அடையாளம் காட்டும் சின்னங்கள் (நந்தி வாகனம், நந்திக்கொடி, அணியும் திருநீறு, உருத்திராக்கம் ஆகியவை), அவனை வழிபடுவதற்கு உரிய சைவ நெறி, அவனது நேர்மைக் குணம் ஆகியவற்றை நாம் அறிந்து கொள்ளுமாறு வேதங்கள் ஆயிரம் முறைகள் கூறியிருந்தாலும், உங்களது மனத்தில் அந்த உண்மைகள் ஏன் புகுவதில்லை. நீங்கள் அவற்றினை உணரக்கூடிய பொறிகள் ஏதும் இல்லாமல் இருப்பதேன்?