4. மாசில் வீணையும் - பாடல் 7
இந்த பாடலில், சிவபிரான் நமக்கு அளித்துள்ள அங்கங்களின் பயன்களை இங்கே கூறுகின்றார்.
வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும்
தாழ்த்த சென்னியும் தந்த தலைவனை
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்தவா வினையேன் நெடும் காலமே

விளக்கம்

சூழ்த்த = சூழ்ந்த, நறுமணம் மிக்க உடையதால் வண்டுகளால் சூழப்பட்ட மலர்கள்

மாமலர் = ஆராய்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மலர்கள்

வீழ்த்துதல் = வீணாக கழித்தல்

சென்ற பாடலில் இறைவன் தந்த ஐம்பொறிகள் மூலம், சிவபிரானைப் பற்றிய உண்மைகள் அறிந்து கொள்ளாத மனிதர்களை பொறிகள் இல்லாதவராகக் கருதும் அப்பர் பிரான் இந்த பாடலில், சிவபிரான் நமக்கு அளித்துள்ள அங்கங்களின் பயன்களை இங்கே கூறுகின்றார்.

அனைத்து உயிர்களையும் பற்றியிருக்கும் ஆணவமலம் இறைவனைப் பற்றிய சிந்தனைகள் நாம் செய்யவிடாமல் தடுக்கின்றன. அதனால் அறியாமையில் மூழ்கியிருக்கும் நெஞ்சினை, மடநெஞ்சம் என்று இங்கே அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். நாம் இறைவனைப் பற்றி நினைத்தால், ஆணவ மலத்தால் ஏற்பட்டுள்ள அறியாமை அகலும். எனவே நமது நெஞ்சம் இறைவனை நினைக்க வேண்டும் என்று கூறுகின்றார்.

இந்த பாடல் நமக்கு சேரமான் பெருமாள் நாயனார் அருளிய பொன் வண்ணத் திருவந்தாதி பாடல் ஒன்றினை நினைவூட்டும். இந்த பாடலில் சேரமான் பெருமாள், இறைவனின் வழிபாட்டின் ஈடுபடுத்தப்படாத அவயவங்கள் சடப் பொருட்கள் இன்று கூறுகின்றார்.

சொல்லாதன கொழு நாவல்ல சோதியுள் சோதி தன் பேர்

செல்லாச் செவி மரம் தேறித் தொழாத கை மண் திணிந்த

கல் ஆம் நினையா மனம் வணங்காத் தலையும் பொறையாம்

அல்லா அவயவம் தானும் மனிதர்க்கு அசேதனமே

சமண மதத்தினைச் சார்ந்து வெகுகாலம் இருந்த காரணத்தால், சிவபிரானை நினையாமல் தான் நெடுங்காலம் வீணாக கழித்ததாக அப்பர் பிரான் இங்கே குறிப்பிட்டு தனது வருத்தத்தை தெரிவிக்கின்றார்.

பொழிப்புரை

தன்னை வாழ்த்துவதற்காக வாயினையும், தன்னை நினைப்பதற்காக நெஞ்சத்தினையும், வணங்கி வழிபட தலையையும் தந்த தலைவனான சிவபிரானை, நல்ல நறுமணம் மிக்க சிறந்த மலர்கள் கொண்டு வழிபடாமல், வீணாக எனது வாழ்நாளில் பெரும்பகுதியை கழித்து விட்டேனே.