4. மாசில் வீணையும் - பாடல் 8
அப்பர் பிரான் திருமண வாழ்க்கையில் ஈடுபடாதவர். சமண சமயத்தைச் சார்ந்து இருந்த போதும் சமண குருவாகவே அவர் வாழ்ந்து வந்தார்.
எழுது பாவை நல்லார் திறம் விட்டு நான்
தொழுது போற்றி நின்றேனையும் சூழ்ந்து கொண்டு
உழுத சால் வழியே உழுவான் பொருட்டு
இழுதை நெஞ்சம் இது என் படுகின்றதே

விளக்கம்

எழுது பாவை நல்லார் = சித்திரத்தில் தீட்டப்பட்டது போன்ற அழகான பெண்கள்

திறம் = தொடர்பு

அப்பர் பிரான் திருமண வாழ்க்கையில் ஈடுபடாதவர். சமண சமயத்தைச் சார்ந்து இருந்த போதும் சமண குருவாகவே அவர் வாழ்ந்து வந்தார். எனவே இந்த குறிப்பு அவரது வாழ்க்கைக்கு பொருந்தாது. இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு, மாதர் பால் மனதினை செலுத்தி பொழுதினைக் கழிப்போர் இறைவனை சிந்திப்பதில்லை. இறைவனைச் சார்ந்து அடையும் இன்பமே என்றும் நிலைத்து நிற்கும் இன்பமாகும். உலகில் நாம் அனுபவிக்கும் இன்பங்கள் அனைத்தும் நிலையற்றவை எனவே இவற்றை சிற்றின்பம் என்று கூறுவார்கள். நமது ஐம்பொறிகள் மூலம் இத்தகைய சிற்றின்பத்தை அனுபவித்த நமது உயிர், மறுபடியும் மறுபடியும் அந்த வழியில் செலுத்தப்படவேண்டும் என்று அறியாமையில் ஆழ்ந்து கிடக்கும் நமது மனம் முயற்சி செய்கின்றது. எனவே அந்த நெஞ்சத்தை இழிந்த நெஞ்சம் என்று குறிப்பிடும் அப்பர் பிரான், உழுத சால் வழி என்று நிலையற்ற சிற்றன்பங்களை அனுபவித்த உயிரும் உடலும் அதன் வழியே மீண்டும் மீண்டும் செல்வதை குறிப்பிடுகின்றார்.

பொழிப்புரை

சித்திரப்பாவைகள் போன்ற அழகான பெண்களின் தொடர்பினை விட்டு விட்டு, இறைவனைத் தொழுது போற்றி நிற்கும் என்னை, எனது இழிந்த மனது மறுபடியும் மறுபடியும் உலகச் சிற்றின்பங்களில் ஆழ்த்துகின்றதே, நான் என் செய்வேன்?