முகப்பு
தினம் ஒரு தேவாரம்

சொற்றுணை வேதியன் - பாடல் 3

தொடர்ந்து செய்யும் எந்தச் செயலையும், பயிலுதல் என்று கூறுவார்கள். கல்வி கற்பதற்கு வயது வரம்பு ஏதும் இல்லை.

Updated On : 21 செப்டம்பர், 2015 at 5:49 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:19 PM

விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்

உண்ணிய புகில் அவை ஒன்றும் இல்லையாம்

பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை

Advertisement

நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே

விளக்கம்

தொடர்ந்து செய்யும் எந்தச் செயலையும், பயிலுதல் என்று கூறுவார்கள். கல்வி கற்பதற்கு வயது வரம்பு ஏதும் இல்லை. நமது முதிய வயதிலும் நாம் ஏதாவது புதிய விஷயத்தைக் கற்றுகொள்கிறோம் என்பதால்தான், கற்றலை கல்வி பயிலுதல் என்று கூறுகிறோம். அதேபோன்று, உலகில் பிறந்த நாம் தொடர்ந்து பாவம் செய்துகொண்டு இருப்பதால், பயின்ற பாவம் என்று இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலத்தில் முளைத்துள்ள ஒரு செடியைப் பிடுங்க வேண்டும் என்றால், நாம் அதன் அருகில் சென்று அதன் அடிப்பகுதியைப் பற்றிக்கொண்டால்தான், அதனை நம்மால் வேருடன் எடுக்கமுடியும். நமது பாவங்களையும் வேருடன் களைவதற்காக நமச்சிவாய மந்திரம், நமது அருகில் வந்து அந்த பாவங்களை களைகிறது என்பதை நண்ணி நின்று என்று இங்கே அப்பர் பிரான் கூறுகிறார்.

பொழிப்புரை

ஆகாயம் வரை மிகவும் உயரமாகக் கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள குவியலாயினும், ஒரு தீப்பொறி அந்த அடுக்கினில் படர்ந்து பற்றிக்கொண்டால், அனைத்து கட்டைகளும் சாம்பலாக மாறி, ஒன்றும் இல்லாத நிலை ஏற்படுவதுபோல், நாம் இந்த உலகினில் தொடர்ந்து செய்த பாவங்கள் எத்தனை ஆயினும், அவை அனைத்தையும் சுட்டெரிக்கும் தன்மை வாய்ந்து நமச்சிவாய என்னும் திருநாமம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.