முகப்பு
தினம் ஒரு தேவாரம்

சொற்றுணை வேதியன் - பாடல் 4

எந்த வகையான இடுக்கண் தன்னை எதிர்நோக்கினும், அந்த இடுக்கண்ணில் இருந்து நீர் என்னை விடுவிக்க வேண்டும்

Updated On : 21 செப்டம்பர், 2015 at 5:51 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:19 PM

இடுக்கண் பட்டிருக்கினும் இரந்து யாரையும்

விடுக்கில் பிரான் என்று வினவுவோம் அல்லோம்

அடுக்கல் கீழ் கிடக்கினும் அருளின் நாம் உற்ற

Advertisement

நடுக்கத்தை கெடுப்பது நமச்சிவாயவே

விளக்கம்

தருமசேனர் என்ற பெயருடன் சமணர்களுக்குக் குருவாக இருந்து, அவர்கள் சார்பில் புத்த மதத்தவருடன் வாதங்கள் செய்து வெற்றிகொண்ட தருமசேனரின் இழப்பு, சமணர்களை வெகுவாகப் பாதித்தது. அவருக்குப் பல கொடுமைகளை இழைத்து பயமூட்டினால் அவர் மறுபடியும் தங்களது மதத்தில் இணைந்துவிடுவார் என்ற நப்பாசை அவர்களுக்கு இருந்தது. ஆனால், சைவ மதத்தைச் சார்ந்த நிலையில், சிவபெருமான் பால் எல்லையில்லாத அன்பு வைத்து, மிகவும் பிடிப்புடன் இருந்த நாவுக்கரசர், சிவபிரானைத் தவிர வேறு எவரையும் தான் பட்ட கஷ்டங்களுக்காக வேண்டுவதில் விருப்பம் இல்லாதவராக இருந்தார். அந்தக் கொள்கைப்பிடிப்பு, இந்தப் பாடல் மூலம் நமக்கு உணர்த்தப்படுகின்றது.

அடுக்கல் - மலை.

அப்பர் பிரானின் பதிகங்களின் கடைப் பாடல்கள் பெரும்பாலும், இராவணின் கயிலை நிகழ்ச்சியும், அப்போது அரக்கனுக்குச் சிவபிரான் அருளிய கருணைச் செயலும் இடம் பெறுவது வழக்கம். ஆனால், இந்தப் பதிகத்தின் கடைப் பாடல் அவ்வாறு அமையவில்லை. அந்த நேரத்தில், சிவபிரான் அருள் செய்யாதிருந்தால் கயிலை மலையின் கீழே நெருக்குண்ட இராவணின் உடல் கூழாக மாறியிருக்கும். என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த அந்த நிலையில், இராவணன் சிவபிரானின் நாமத்தைப் புகழ்ந்து கூறும் சாம வேதத்தினை இசைத்துப் பாடவே, இறைவனின் கருணையைப் பெற்றுய்ந்தான். மலையின் கீழ் அமுக்குண்டு இருந்த இராவணின் நிலை அப்பர் பிரானுக்கு நினைவுக்கு வரவே, அத்தகைய இடரினின்று அவனை நமச்சிவாய மந்திரம் காத்ததுபோல், தனது நடுக்கத்தையும் கெடுத்துக் காப்பாற்றும் என்று இங்கே உணர்த்துகிறார்.

பொழிப்புரை

எந்த வகையான இடுக்கண் தன்னை எதிர்நோக்கினும், அந்த இடுக்கண்ணில் இருந்து நீர் என்னை விடுவிக்க வேண்டும் என்று எவரையும் இறைஞ்சும் நிலையில் நான் இல்லை. அருளின் வயமாகிய சிவபிரானின் நாமமாகிய நமச்சிவாய மந்திரம், மலையின் கீழ் மாட்டிக்கொண்டு எழமாட்டாத நிலையில் இருந்தாலும், அதனால் எனக்கு ஏற்படும் நடுக்கத்தைக் கெடுத்துக் காப்பாற்றும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.