முகப்பு
தினம் ஒரு தேவாரம்

சொற்றுணை வேதியன் - பாடல் 5

நங்கள் - நாம் அனைவர். வேதத்தின் ஆறு அங்கங்கள், சிட்சை, கல்பம், வியாகரணம், நிருத்தம், சந்தம், சோதிடம் ஆகியவை.

Updated On : 21 செப்டம்பர், 2015 at 5:54 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:19 PM

வெந்தநீறு அருங்கலம் விரதிகட்கெலாம்

அந்தணர்க்கு அருங்கலம் அருமறை ஆறங்கம்

திங்களுக்கு அருங்கலம் திகழும் நீள்முடி

Advertisement

நங்களுக்கு அருங்கலம் நமச்சிவாயவே

விளக்கம்

விரதிகள் - விரதங்களை மேற்கொண்டு தவம் செய்து மெய்ப்பொருளை நாடும் முனிவர்கள்.

வெந்தநீறு - சாம்பல், இங்கே விபூதியைக் குறிக்கும்.

நங்கள் - நாம் அனைவர். வேதத்தின் ஆறு அங்கங்கள், சிட்சை, கல்பம், வியாகரணம், நிருத்தம், சந்தம், சோதிடம் ஆகியவை.

பலவகையான விரதங்களை மேற்கொண்டு தவம் செய்து மெய்ப்பொருளை நாடும் முனிவர்களுக்கு அழகு சேர்ப்பது, அவர்கள் அணியும் விபூதியாகும்; அந்தணர்க்குப் பெருமை சேர்ப்பது, அவர்கள் நான்மறைகளையும் ஆறு அங்கங்களையும் கற்றுத் தேர்ந்தவராக இருத்தல்; சந்திரனுக்கு அழகு சேர்ப்பது, அவன் சிவபெருமானைச் சரண் அடைந்து அவரது திருமுடியில் இடம் பெற்றிருக்கும் நிலை; சைவர்களாகிய நம் அனைவர்க்கும் பெருமை சேர்க்கும் அணிகலனாக விளங்குவது, நமச்சிவாய மந்திரம் ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.