முகப்பு
தினம் ஒரு தேவாரம்

33. அரியானை அந்தணர் - பாடல் 4

சிறப்பான தவங்கள் செய்வோர் போற்றும் தலைவன் சிவபெருமான்; அவன் தேவர்களுக்குத் தலைவன்;

Updated On : 5 ஆகஸ்ட், 2016 at 4:01 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:38 PM

பாடல் 4

அருந்தவர்கள் தொழுது ஏத்தும் அப்பன் தன்னை அமரர்கள்
தம் பெருமானை அரனை மூவா
மருந்து அமரர்க்கு அருள் புரிந்த மைந்தன் தன்னை மறிகடலும்
குலவரையும் மண்ணும் விண்ணும்
திருந்து ஒளிய தாரகையும் திசைகள் எட்டும் திரிசுடர்கள் ஓர்
இரண்டும் பிறவும் ஆய
பெருந்தகையைப் பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத
நாளெல்லாம் பிறவா நாளே

விளக்கம்

மூவா மருந்து = மூப்பினைத் தடுக்கும் மருந்து, அமிர்தம். மறிகடல் = அலை வீசும் கடல். குலவரை = சிறந்த மலை. திருந்தொளிய தாரகை = திருத்தமான ஒளியை உடைய நட்சத்திரங்கள். திரி சுடர்கள் = வானத்தில் உலவுகின்ற சூரிய சந்திரர்கள். அரன் = தீமைகளை அழிப்பவன்.

பொழிப்புரை

சிறப்பான தவங்கள் செய்வோர் போற்றும் தலைவன் சிவபெருமான்; அவன் தேவர்களுக்குத் தலைவன்; தீமைகளை அழிப்பவன்; மூப்பினைத் தவிர்க்கும் அமுதம் தேவர்களுக்கு கிடைக்குமாறு உதவிய வல்லமை படைத்தவன்; அலைகள் கொண்ட கடல், சிறந்த மலைகள், மண்ணுலகம், விண்ணுலகம், திருத்தமான ஒளியை வீசும் நட்சத்திரங்கள், வானில் உலவும் சூரிய சந்திரர்கள், எட்டு திசைகள், மற்றும் உள்ள பொருட்கள் அனைத்தையும் அவைகளுடன் இருந்து செயல்படுத்தும் வல்லமை பெற்றவன்; இத்தகைய மேன்மை 33. அரியானை அந்தணர் - பாடல்உடைய பெரும்பற்றப்புலியூர் பெருமானைப் பேசாத நாட்கள் நாம் பிறவா நாட்களாகும்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.