முகப்பு
தினம் ஒரு தேவாரம்

34. பாளையுடைக் கமுகோங்கி -  பாடல் 7

வாயு, திருமால் மற்றும் அக்னி ஆகியோரைப் பாகங்களாகக் கொண்டு தயாரித்த அம்பினால், வானில் திரிந்துகொண்டிருந்த மூன்று பறக்கும் கோட்டைகளையும்,

Updated On : 2 செப்டம்பர், 2016 at 5:24 PM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:30 PM

பாடல் 7

தெரித்த கணையால் திரிபுரம் மூன்றும் செந்தீயின் மூழ்க

எரித்த இறைவன் இமையவர் கோமான் இணையடிகள்

Advertisement

தரித்த மனத்தவர் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்

சிரித்த முகம் கண்ட கண் கொண்டு மற்றினிக் காண்பதென்னே

விளக்கம்

தெரித்த கணை = தேர்ந்தெடுத்த அம்பு. மிகவும் வேகமாக காற்றினில் செல்ல வேண்டும் என்று வாயுவினை இறக்கைகளாகவும், தண்டு வலிமையாக இருக்க வேண்டும் என்று திருமாலைத் தண்டாகவும், கூர்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக அக்னியை நுனியாகவும் கொண்டு தயாரித்த அம்பு என்பதை குறிப்பிடும் வகையில் தெரித்த அம்பு என்று அப்பர் பிரான் இங்கே கூருகின்றார்.

பொழிப்புரை

வாயு, திருமால் மற்றும் அக்னி ஆகியோரைப் பாகங்களாகக் கொண்டு தயாரித்த அம்பினால், வானில் திரிந்துகொண்டிருந்த மூன்று பறக்கும் கோட்டைகளையும், நெருப்பினில் மூழ்குமாறு எரித்த, சிவபிரான் தேவர்களின் தலைவன் ஆவார். இவ்வாறு சிறப்பு பெற்ற சிவபெருமானின் திருவடிகளைத் தங்களது மனத்தினில் தரித்த, அடியவர்கள் வாழ்கின்ற தில்லையில் நடனமாடும் சிற்றம்பலவனின், சிரித்த முகத்தினைக் கண்ட கண்களுக்கு, அந்த காட்சியினை விடவும் உயர்ந்த காட்சி வேறேதும் உண்டோ, இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.