32. பனைக்கை மும்மத வேழம் - பாடல் 7
ஆலகால விடத்தைத் தனது கழுத்தில் அடக்கியதால் கருமையான கண்டத்தை உடையவனும், எண்தோள்களையும் மூன்று கண்களையும் உடையவனும்,
பாடல் 7
மை கொள் கண்டன் எண்தோளன்
பைகொள் பாம்பு அரை ஆர்த்த பரமனார்
செய்ய மாது உறை சிற்றம்பலத்து எங்கள்
ஐயனை அடியேன் மறந்து உய்வனோ

விளக்கம்

செய்ய மாது = இலக்குமி. இலக்குமியின் சிவந்த நிறம் கருதி செய்ய மாது என்று குறிப்பிடப்படுகின்றது. பைகொள் பாம்பு = நச்சுப் பைகளை உடைய பாம்பு.

பொழிப்புரை

ஆலகால விடத்தைத் தனது கழுத்தில் அடக்கியதால் கருமையான கண்டத்தை உடையவனும், எண்தோள்களையும் மூன்று கண்களையும் உடையவனும், நச்சுப்பைகளை உடைய பாம்புகளைத் தனது இடுப்பில் சுற்றிக்கொண்டவனும், அனைவருக்கும் மேலாக இருப்பதால் அவர்களுக்கு தலைவனாக விளங்குபவனும் ஆகிய சிவபெருமான், இலக்குமி உறைவதால் செல்வச் செழிப்புடன் விளங்கும் சிற்றம்பலத்துத் தலைவன் ஆவான். எங்களது தலைவனாகிய அவனை மறந்தால் நான் வாழ்வில் உய்வினை அடையமாட்டேன். எனவே எப்பொழுதும் அவரை நினைத்தவாறே இருப்பேன்

Advertisement