முகப்பு
தினம் ஒரு தேவாரம்

17. மாமாத்தாகிய மாலயன் - பாடல் 3

பொருள் ஈட்டுவதும், இன்பம் துய்ப்பதுமே வாழ்க்கை என்று, எனது அறிவு தந்த மயக்கத்தில் ஆழ்ந்திருந்த நான்,

Updated On : 4 மார்ச், 2016 at 12:12 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:12 PM

பாடல் 3

காமாத்தம் எனும் கார் வலைப் பட்டு நான்
போமாத்தை அறியாது புலம்புவேன்
ஆமாத்தூர் அரனே என்று அழைத்தலும்
தேமாத் தீங்கனி போலத் தித்திக்குமே

விளக்கம்

காமாத்தம் = காமமும் அர்த்தமும், இன்பமும் பொருளும். தர்மம் அர்த்தம் காமம் மோக்ஷம் என்று வடமொழியில் கூறப்படும் நான்கு வகையான நெறிகள். தமிழில் அறம், பொருள் இன்பம் வீடு என்று கூறப்படுகின்றன. கார் = அறிவு தரும் மயக்கம். போமாத்தை = மீண்டு செல்லும் வழியை; தகுதிக்கு மீறிய பேராசையை காமம் என்று சொல்வது வழக்கம். பேராசையால் நாம் செல்லத் தகாத வழியில் சென்று பல இன்னல்களுக்கு ஆளாகின்றோம். அதிலிருந்து மீண்டு வரும் வழி அறியாது துன்பப்படுவதை குறிக்கின்றார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமாக உள்ளது. அத்தகைய தருணங்களில் நாம் இறையுணர்வுடன், இறைவனின் திருநாமத்தை சொல்லி, துன்பங்களிலிருந்து விடுதலை பெறலாம் என்று இங்கே உணர்த்தப்படுகின்றது.

பொழிப்புரை

பொருள் ஈட்டுவதும், இன்பம் துய்ப்பதுமே வாழ்க்கை என்று, எனது அறிவு தந்த மயக்கத்தில் ஆழ்ந்திருந்த நான், பொருளையும் இன்பத்தையும் தவிர்த்து, வாழ்வினில் உய்வினை எய்தி வீடுபேறு அடையும் வழியினை அறியாது புலம்புகின்றேன். ஆமாத்தூர் அரனே என்று நான் இறைவனை அழைத்த போது அவன் எனது புலம்பலைப் புரிந்துகொண்டு, நான் வீடுபேறு அடையும் வழியினை உணர்த்தியதால், அவன் எனக்கு மிகவும் இனிமையான மாங்கனி போன்று இனிக்கின்றான்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.