17. மாமாத்தாகிய மாலயன் - பாடல் 7
திருநீற்றினைத் தனது மேனியில் பூசியவனும், அழகிய ஆபரணங்களை அணிந்த மங்கையாகிய பார்வதி தேவியைத் தனது
பாடல் 7
நீற்றினார் திருமேனியன் நேரிழை
கூற்றினான் குழல் கோலச் சடையில் ஓர்
ஆற்றினான் அணி ஆமாத்தூர் மேவிய
ஏற்றினான் எமை ஆளுடை ஈசனே

விளக்கம்

நீற்றினார் = திருநீறு பொருந்திய. நேரிழை = அழகிய ஆபரணங்களை அணிந்த பெண்மணி, இங்கே பார்வதி அம்மையை குறிக்கின்றது. கோலம் = அழகிய. அணி = அழகு நிறைந்த. ஏற்றினான் = எருதினை வாகனமாக உடையவன்.

பொழிப்புரை

திருநீற்றினைத் தனது மேனியில் பூசியவனும், அழகிய ஆபரணங்களை அணிந்த மங்கையாகிய பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு கூறாகக் கொண்டவனும், குழல் போன்று சுருண்டதும் அழகியதும் ஆகிய சடையில் கங்கை ஆற்றினை அடக்கியவனும், எருதினை வாகனமாகக் கொண்டவனும், அழகிய ஆமாத்தூர் தலத்தில் உறைபவனும் ஆகிய சிவபெருமான் எம்மை ஆட்கொண்டுள்ளான்

Advertisement