முகப்பு
தினம் ஒரு தேவாரம்

17. மாமாத்தாகிய மாலயன் - பாடல் 8

தோத்திரப் பாடல்களை இசையுடன் கேட்பதில் சிவபெருமானுக்கு மிகுந்த விருப்பம். எனவேதான்,

Updated On : 4 மார்ச், 2016 at 12:22 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:15 PM

பாடல் 8

பண்ணில் பாடல்கள் பத்தி செய் வித்தகர்க்கு
அண்ணித்தாகும் அமுதினை ஆமாத்தூர்
சண்ணிப்பானை தமர்க்கு அணித்தாயதோர்
கண்ணில் பாவை அன்னான் அவன் காண்மினே

விளக்கம்

தமர் = அடியார். வித்தகர் = திறமை படைத்தவர்கள். அண்ணித்தல் = இனிப்பாக இருத்தல். சண்ணிப்பான் = திருநீற்றினை உத்தூளனமாக பூசிக்கொள்ளுதல். திருநீற்றினை நீருடன் கலந்து குழைத்து பூசிக்கொள்ளாமல், திருநீற்றினை அப்படியே பொடியாக பூசிக்கொள்ளும் முறை, உத்தூளனம் என்று சொல்லப்படும்.

தோத்திரப் பாடல்களை இசையுடன் கேட்பதில் சிவபெருமானுக்கு மிகுந்த விருப்பம். எனவேதான், ஞானசம்பந்தப் பெருமான் தனது பெரும்பாலான பாடல்களில் இசையுடன் தேவாரப் பாடல்களை, அவைகளுக்கு உரிய பண்ணுடன் இசைத்துப் பாட வல்லவர் பெரும் பயன்கள் என்று, தேவாரப் பாடல்களின் பலன்களை குறிப்பிடுகின்றார்.

தனது அடியார்களுக்கு சிவபெருமான், அவர்களது கண்ணின் மணி போன்றவன் என்று அப்பர் பிரான் கூறுவது நமக்கு திருமந்திரப் பாடல் ஒன்றினை நினைவூட்டுகின்றது. பிற பொருட்களை அறிவால் கண்டறிவது போன்று சிவபெருமானை அறிவினால் காண முடியாது. அவன் மீது அன்பு வைத்து, அந்த அன்பின் விளைவால் விளையும் அவனது கருணை கொண்டே அவனை நாம் காண முடியும். அவனிடம் அன்பு வைக்கும் அடியார்களுக்கு, அவனே அவர்களது கண்ணின் மணியாக இருந்து அவர்களுக்கு தன்னைக் காண்பிப்பான். அவ்வாறு காணும் அடியார்களுக்கு, தங்களது உடலினை வருத்திக்கொண்டு அமுதம் பெற்ற தேவர்களைப் போலன்றி, உடல் வருந்தாது பெற்ற அமுதமாக இனிப்பான். அவனைக் கொண்டாடிப் போற்றும் அடியார்களை விட்டு அவன் என்றும் நீங்காது இருப்பான். இவ்வாறு அவனிடம் அன்பு செலுத்தும் அடியார்களுக்கு அவன் என்றும் துணையாக இருப்பான் என்றும் இந்த பாடலில் திருமூலர் கூறுகின்றார்.

காண வல்லார்க்கு அவன் கண்ணின் மணி ஒக்கும்
காண வல்லார்க்கு கடலின் அமுது ஒக்கும்
பேண வல்லார்க்குப் பிழைப்பு இலன் பேர் நந்தி
ஆணம் வல்லார்க்கே அவன் துணையாமே

அப்பர் பெருமான் கயிலாயத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றில் (6.55.7) கண்ணின் மணியாகி நின்றாய் என்று சிவபெருமானை குறிப்பிடுவது இங்கே நமது நினைவுக்கு வருகின்றது.

பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி என் சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனும் தீ ஆனாய் போற்றி மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி

ஆவடுதுறை தலத்தின் மீது அருளிய திருத்தாண்ட்கத்தின் முதல் பாடலில் (6.46.1), கண்ணே, கண்ணின் கருமணியே, மணியாடு பாவாய் என்று அப்பர் பிரான் சிவபெருமானை அழைப்பதை நாம் உணரலாம். திரு என்பது நாம் செல்வம் அடைவதற்கு காரணமாக உள்ள நல்வினைகளை குறிக்கின்றது.

திருவே என் செல்வமே தேனே வானோர் செழுஞ்சுடரே செழுஞ்சுடர் நற்சோதி மிக்க
உருவே என் உறவே என் ஊனே ஊனின் உள்ளமே உள்ளத்தினுள்ளே நின்ற
கருவே என் கற்பகமே கண்ணே கண்ணின் கருமணியே மணியாடு பாவாய் காவாய்
அருவாய் வல்வினை நோய் அடையா வண்ணம் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே

பொழிப்புரை

இறைவனின் புகழ் பாடும் தோத்திரப் பாடல்களை இசையுடன் கலந்து, பக்தியுடன் பாடும் திறமை படைத்த அடியார்களுக்கு இனிக்கும் அமுது போன்று இருப்பவனும், ஆமாத்தூர் தலத்தில் உறைபவனும், திருநீற்றுப் பொடியினை நிறைய எடுத்துத் தனது உடலில் பூசிக் கொள்பவனும், அடியார்களுக்கு அவர்களது கண்ணின் கருமணிப் பாவை போன்று மிகவும் நெருக்கமாக இருப்பானும் ஆகிய இறைவனை, ஆமாத்தூர் தலம் சென்று காண்பீர்களாக.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.