19. ஆர்த்தான்காண் அழல்நாகம் - பாடல் 3
மழபாடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றிலும் (2.9.7) சம்பந்தர் இமையாத முக்கண்ணினன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். மழபாடி மருந்து என்று பெருமானை இ
பாடல் 3
நம்பன் காண் நரை விடை ஒன்று ஏறினான் காண் நாதன் காண்
கீதத்தை நவிற்றினான் காண்
இன்பன் காண் இமையா முக்கண்ணினான் காண் ஏசற்று மனம்
உருகும் அடியார் தங்கட்கு
அன்பன் காண் ஆரழல் அது ஆடினான் காண் அவன் இவன் என்று
யாவர்க்கும் அறிய ஒண்ணா
செம்பொன் காண் திருமுண்டீச்சரத்து மேய சிவலோகன் காண்
அவன் என் சிந்தையானே

விளக்கம்

நம்பன் = நம்புதற்கு உரியவன். திரிபுரத்து அரக்கர்களுடன் போரிடச் சென்ற போது, தேரின் அச்சு முறிந்து விடவே, திருமால் இடபத்தின் வடிவம் எடுத்து பெருமானைத் தாங்கினார் என்று புராணங்கள் கூறுகின்றன. அந்த மால்விடையிலிருந்து வேறுபடுத்தி காட்டும் வண்ணம், நந்தியம்பெருமானை நரை விடை என்று அப்பர் பிரான் கூறுகின்றார். நரை விடை = வெண்மை நிறத்து இடபம். நவிலுதல் = பாடுதல்.

சிவபெருமானை இமையாத முக்கண் ஈசன் என்று பல தேவாரப் பாடல்களில் அருளாளர்கள் கூறுகின்றனர். பெருமானின் மூன்றாவது கண் எப்போதும் மூடியபடியே இருக்கும். பொதுவாக மற்றவர்களுக்கு இருப்பதுபோல் இருக்கும் இரண்டு கண்களும் எப்போதும் திறந்தபடியே இருக்கும். அதனால் தான் இமையாத முக்கண் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். இந்த கண்கள், இமைத்தால், அதாவது தங்களது நிலையிலிருந்து மாறினால் என்ன ஏற்படும் என்பதை தேவாரப் பாடல்கள் விளக்குகின்றன. எப்போதும் திறந்தே இருக்கும். இரண்டு கண்கள் மூடியபோது உலகம் இருண்ட செய்தி இந்த பாடலில் (4.14.8) கூறப்பட்டுள்ளது. மூடாது எப்போதும் திறந்தே இருக்கும் இரண்டு கண்களும் மூடப்பட்ட போது, சூரிய சந்திரர்களாக விளங்கும் இரண்டு கண்களும் மூடப்பட்டமையால் உலகெங்கும் இருள் படர்ந்தது என்று இமையாமல் திறந்த கண்கள் தனது நிலையிலிருந்து மாறியதால் ஏற்பட்ட விளைவு இங்கே கூறப்படுகின்றது. ..

நலமலி மங்கை நங்கை விளையாடி ஓடி நயனத் தலங்கள் கரமா
உலகினை ஏழும் முற்றும் இருள் மூட மூட இருள் ஓட நெற்றி ஒரு கண்
அலர் தர வஞ்சி மற்றை நயனம் கை விட்டு மடவாள் இறைஞ்ச மதி போல்
அலர் தரு சோதி போல அலர்வித்த முக்கண் அவனா நமக்கொர் சரணே

இந்த பாடலின் திரண்ட கருத்து பின்வருமாறு: அழகும் பண்பும் நிறைந்த பார்வதி தேவி, விளையாட்டாக சிவபிரானின் இரண்டு கண்களையும் பொத்தினபோது, பெருமானின் இரண்டு கண்களும் சூரிய சந்திரர்களாக விளங்கும் காரணத்தால், உலகெங்கும் இருள் சூழ்ந்தது. உலகினில் இருள் சூழ்ந்து, உலகினில் உள்ள அனைத்து உயிர்களும் வாடின. உயிர்களின் வாட்டத்தை நீக்கவேண்டி, சிவபெருமான் தனது மூன்றாவது கண்ணினைத் திறந்து ஒளி பரப்பவே உலகினைச் சூழ்ந்திருந்த இருள் அகன்றது. மூன்றாவது கண்ணிலிருந்து வெளிப்பட்ட வெப்பத்தைத் தாங்கமுடியாமல், பார்வதி தேவி தனது இரு கைகளையும் எடுத்து, தான் செய்த தவறினை மன்னித்து அருளுமாறு இறைவனை வேண்டினாள். மீண்டும், சந்திரனைப் போலவும், சூரியனைப் போலவும் தனது இரண்டு கண்களையும் ஒளிரச் செய்து உலகினில் ஒளி பரப்பிய முக்கண் மூர்த்தி நமக்கு ஒப்பற்ற அடைக்கலம் தருபவராவார்.

இந்த நிகழ்ச்சி சுந்தரின் கலயநல்லூர் பதிகத்தின் (7.16) நான்காவது பாடலிலும் குறிப்பிடப் படுகின்றது. பல நூல்களைக் கற்ற அறிவினைக் கொண்டு வேள்விகள் வளர்த்து கலிபுருடனை வெற்றிகொண்ட அந்தணர்கள் என்று சுந்தரர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.

மலை மடந்தை விளையாடி வளையாடு கரத்தால் மகிழ்ந்து அவள் கண்
புதைத்தலுமே வல்லிருளாய் எல்லா
உலகு உடன் தான் மூட இருள் ஓடும் வகை நெற்றி ஒற்றைக் கண்
படைத்து உகந்த உத்தமன் ஊர் வினவில்
அலை அடைந்த புனல் பெருகி யானை மருப்பு இடறி அகிலொடு சந்து
உந்தி வரும் அரிசிலின் தென்கரை மேல்
கலை அடைந்து கலி கடி அந்தணர் ஓமப்புகையால் கணமுகில் போன்று
அணி கிளரும் கலயநல்லூர் காணே

இமையாது, எப்போதும் மூடியே கிடக்கும் நெற்றிக் கண் ஒரு நொடிக்கும் குறைவாக திறந்தபோது வெளிப்பட்ட வெப்பத்தினை தாங்க முடியாமல், தேவியில் கைகளிலிருந்து வியர்வை ஆறாக பெருகிய செய்தி புராணங்களில் கண்டோம். அந்த மூன்றாவது கண்ணினை பெருமான் திறந்தபோது, மன்மதன் எரிந்த செய்தி பல தேவாரப் பாடல்களில் கூறப்படுவதை நாம் அறிவோம். இந்த இரண்டு செய்திகளையும் உள்ளடக்கி, பல தேவாரப் பாடல்களில் இமையாத முக்கண் என்று பல இடங்களிலும் கூறப்படுகின்றது. அத்தகைய பாடல்களில் சிலவற்றை நாம் இங்கே காண்போம்.

இமையாத முக்கண் என்று சம்பந்தர் கூறும் வீழிமிழலை பதிகத்தின் முதல் பாடல் (1.4.1.) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பதிகம் அருளப்பட்ட பின்னணி சுவாரசியமானது. சீர்காழியில் வாழும் அந்தணர்கள், தாங்கள் வாழும் வாழும் சீர்காழி நகரினைச் சார்ந்த, ஞானசம்பந்தர் நெடுநாட்கள் தலயாத்திரையில் இருந்ததால், தங்களது நகருக்கு அவர் விரைவில் திரும்ப வேண்டும் என்று வீழிமிழலையில் இருந்த சம்பந்தரை சந்தித்து, வேண்டுகோள் விடுத்தனர். அடுத்த நாள் சம்பந்தர் வீழிமிழலைக் கோயிலுக்குச் சென்று சிவபெருமானின் கருத்தை அறிய முற்பட்டபோது, கோயில் விமானத்தில், சீர்காழியில் இருந்த கோலத்தை சிவபிரான் அவருக்கு காட்டியருளி, இன்னும் சில நாட்கள் மிழலையில் இருக்க வேண்டும் என்பதை குறிப்பாக உணர்த்தினார். சீர்காழி தலத்தில் தோணியப்பர் சன்னதியில், காட்சி தரும் சிவபெருமானின் கைகளில் மானும் மழுவும் இருப்பதில்லை. ஆனால் மூர்த்தி வடிவத்தில், பல கோயில்களில் நாம் காணும் பெருமானின் சித்திரங்கள் மற்றும் சிலைகள், பெருமானை மானும் மழுவும் ஏந்தியவராக சித்தரிக்கின்றன. தனக்கு சீர்காழி தலத்தில் இருக்கும் நிலையில் காட்சி கொடுத்த பெருமானை, புகலி (சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) நிலாவிய புண்ணியன் விண்ணிழி கோயில் விரும்பி இருந்தது ஏன் என்ற கேள்வியை எழுப்பியவாறு சம்பந்தர் பாடிய பதிகம் இது.

மைம்மரு பூங்குழல் கற்றை துற்ற வாள் நுதல் மான்விழி மங்கையோடும்
பொய்ம் மொழியா மறையோர்கள் ஏத்தப் புகலி நிலாவிய புண்ணியனே
எம் இறையே இமையாத முக்கண் ஈச என் நேச இது என் கொல் சொல்லாய்
மெய்ம்மொழி நான்மறையோர் மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே

மழபாடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றிலும் (2.9.7) சம்பந்தர் இமையாத முக்கண்ணினன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். மழபாடி மருந்து என்று பெருமானை இங்கே சம்பந்தர் குறிப்பிடுகின்றார். நமது உடலின் நோய்கள் தீருவதற்கு கொடுக்கப்படும் மருந்துகள், நாம் உட்கொள்ளவும் பூசிக்கொள்ளவும் தரப்படுகின்றன. ஆனால் இறைவன் எனப்படும் மருந்து, நமது மனதினை தூய்மை செய்வதற்காக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது என்பதால், இறைவன் எனப்படும் மருந்தினை நாம் சிந்திக்க வேண்டும், நினைக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வண்ணம், மழபாடி மருந்தினை சிந்திப்பவர்களின் வினைகள் தேய்ந்து அறுந்துவிடும் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார்.

சந்தவார் குழலாள் உமை தன்னொரு கூறுடை
எந்தையான் இமையாத முக்கண்ணினன் எம்பிரான்
மைந்தன் வார்பொழில் சூழ்மழ பாடி மருந்தினைச்
சிந்தியா எழுவார் வினை ஆயின தேயுமேஅப்பர் பிரான் தனது ஆருயிர் திருவிருத்தம் பதிகத்தின் (4.84) மூன்றாவது பாடலில் இமையாத முக்கண் பெரியான் என்று சிவபெருமானை குறிப்பிடுகின்றார். பிறவாத தன்மை உடைய பெருமானை பிறப்பு என்றால் என்னவென்று அறியான் என்று நயமாக அப்பர் பிரான் உரைக்கும் பாடல். பெரியார் = வேதங்களைக் கற்றும் கேட்டும் அறிந்தவர்கள். முதலில் தக்கன் செய்த தவறுகளை பொருட்படுத்தாமல் இருந்த பெருமான், அவனது தவறுகளை மிகவும் அதிகரித்து தனது மகள் என்றும் பாராமல் தாட்சாயணியை இழித்துப் பேசியதன் விளைவாக, இழிவான சொற்களைத் தாங்க முடியாதவளாக அன்னை யாக குண்டத்தில் விழுந்து தனது உயிரினை மாய்த்து கொண்டபின்னர், மனம் பொறுக்காமல் தக்கனது வேள்வியினை அழிப்பதற்கு வீரபத்திரரை பெருமான் அனுப்புகின்றார். இந்த செய்தியும் இந்த பாடலில் காணப்படுகின்றது.

தரியா வெகுளியனாய்த் தக்கன் வேள்வி தகர்த்து உகந்த
எரியார் இலங்கிய சூலத்தினான் இமையாத முக்கண்
பெரியான் பெரியார் பிறப்பு அறுப்பான் என்றும் தன் பிறப்பை
அரியான் அடிநிழல் கீழது அன்றோ எனது ஆருயிரே

கற்குடி தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (6.60.3) இமையா நெற்றிக் கண்ணவன் என்று பெருமானை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். ஐந்து பூதங்களுக்கும் அடிப்படையான ஆகாயம் ஓசை என்ற பண்பினைக் கொண்டது. பரந்த வெளியிலிருந்து தான் நாதம் எழுகின்றது: ஆகாயத்திலிருந்து எழுந்த காற்றினுக்கு ஓசை எனப்படும் பண்புடன் தொடு உணர்வு இருப்பதையும் நாம் உணர்கின்றோம். காற்று நமது உடலின் மீது படர்வதை நம்மால் உணர முடிகின்றது. அடுத்து வரும் தீக்கு வடிவம் இருப்பதை நாம் காண்கின்றோம். ஆகாயத்திற்கும் காற்றுக்கும் இல்லாத வடிவம் தீக்கு உள்ளது. அடியில் பெருத்து நுனியில் சிறுத்து காணப்படுவதே தீயின் வடிவம். நீரினைப் போன்று பாத்திரத்தின் உருவத்திற்கு ஏற்றவாறு தீயின் வடிவம் மாறுவதில்லை. அடுத்து வரும் நீரினுக்கு மேலே குறிப்பிட்ட ஓசை, தொடு உணர்வு, வடிவம் ஆகிய பண்புகளுடன் சுவை என்ற பண்பு இருப்பதையும் நாம் உணர்கின்றோம். ஐந்தாவதாக வரும் நிலத்தில் நீரினுக்கு உள்ள நான்கு பண்புகளுடன் ஐந்தாவதாக மணம் என்ற பண்பும் இருப்பதை நாம் காண்கின்றோம். தொடு உணர்வினை ஊரு என்று குறிப்பிடுவார்கள். இவ்வாறு ஐந்து குணங்களாக மேற்கண்ட பூதங்களில் விளங்குபவன் இறைவன் தான் என்பதை, அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.

மண்ணதனில் ஐந்தை மா நீரில் நான்கை வயங்கெரியில் மூன்றை மாருதத்து இரண்டை
விண்ணதனில் ஒன்றை விரிகதிரைத் தண்மதியைத் தாரகைகள் தம்மின் மிக்க
எண்ணதனில் எழுத்தை ஏழிசையைக் காமன் எழில் அழிய எரி உமிழ்ந்த இமையா நெற்றிக்
கண்ணவனைக் கற்குடியில் விழுமியானைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே

கண்கள் இமைத்தலும், உடல் மூச்சு விடுதலும், உயிருடன் கூடிய உடம்பின் செயல்கள். ஆனால் பெருமான் உயிர்களிலிருந்து மாறுபட்டவர். உயிர் உடலுடன் கூடி இருக்கும் வரை, கண்ணிமைத்தலும், மூச்சு விடுதலும் நிகழும். உயிர் நீத்த பின்னர் இத்தகைய நிகழ்ச்சிகள் நடைபெறாது. சிவபெருமானின் உடலில் உயிர் வந்து சேர்வதும் இல்லை. அவரது உடலை விட்டு உயிர் பிரிவதும் இல்லை. எனவே இமைத்தலும் மூச்சு விடுதலும் அவர் உடலில் நடப்பதில்லை. எனவே பெருமான் உயிர்த்தலும் இமைத்தலும் தேவைப்படாது தானே இயங்கும் கடவுள் ஆவார். இந்த செய்தியை குறிப்பிடும் அப்பர் பிரான், இமையாது இருந்தாய் என்று கயிலை திருத் தாண்டகத்தின் பாடல் (6.55.8) ஒன்றினில் கூறுகின்றார்.

இமையாது உயிராது இருந்தாய் போற்றி என் சிந்தை நீங்கா இறைவா போற்றி
உமை பாகம் ஆகத்து அணைத்தாய் போற்றி ஊழி ஏழான ஒருவா போற்றி
அமையா வரு நஞ்சம் ஆர்ந்தாய் போற்றி ஆதி புராணனாய் நின்றாய் போற்றி
கமையாகி நின்ற கனலே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி

இந்த பாடலில் அப்பர் பிரான், அவன் இவன் என்று யாவரும் அறியவொண்ணா செம்பொன் என்று இறைவனை குறிப்பிடுகின்றார். இவ்வாறு அவர் சொல்வது நமக்கு கடும்பகல் நட்டமாடி என்று தொடங்கும் பதிகத்தின் பாடலை (4.77.2) நினைவூட்டுகின்றது. இறைவனின் திருவுருவத்தைத் தங்கள் கண்ணால் கண்ட அருளாளர்கள் ஒரு சிலரே. அவர்கள் கூறிய அடையாளங்களைக் கொண்டு தான் நாம் இறைவன் இப்படியிருப்பான் என்று நமது நினைவில் நிறுத்தி வழிபடுகின்றோம். அவ்வாறு இறைவனைக் கண்ட அருளாளர்களும் தாங்கள் கண்ட தோற்றத்தை முழுவதும் வார்த்தைகளில் வடிக்கவோ அல்லது சிற்பமாக செதுக்கவோ அல்லது ஓவியமாக வரையவோ திறன் படைத்தவர்களா என்றால் அதுவும் இல்லை என்று இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார்.

கோவணம் உடுத்தவாறும் கோளரவு அசைத்தவாறும்
தீவணச் சாம்பர் பூசித் திருவுரு இருந்தவாறும்
பூவணக் கிழவனாரைக் புலியுரி அரையனாரை
ஏவணச் சிலையினாரை யாவரே எழுதுவாரே

இறைவனின் திருவுருவக் காட்சியினைக் காண்பதற்கே அவனருள் வேண்டும். அவனுக்கு ஒப்பாக சொல்வதற்கு எவரும் இல்லை, அவன் ஓரூரில் உறைபவன் அல்லன்: அவனது உருவத்திற்கு உவமை ஏதும் இல்லை: எனவே இறைவனின் நிறம் இன்னது, அவனுக்கு உவமையாக இந்த பொருட்கள் உள்ளன என்று எவராலும் சொல்ல முடியாது என்ற கருத்தை அப்பர் பிரான் வெளிப்படுத்தும் பாடலை நாம் இங்கே காணலாம் (6.97.10)

மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி மயானத்தான் வார்சடையான் என்னின் அல்லால்
ஒப்புடையனல்லன் ஒருவனல்லன் ஓரூரனல்லன் ஓர் உவமனில்லி
அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும் அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்றெழுதிக் காட்ட ஒணாதே

பல்வேறு வடிவங்களில் அடியார்களுக்கு காட்சி அளிப்பவனும், எங்கும் நிறைந்தும் காணப்படும் இறைவனை ஒரு குறிப்பிட்ட உருவத்தில் அடக்க முடியுமா, முடியாது அல்லவா. எந்த வடிவத்தில் அவனை நினைத்தாலும் அதனையும் கடந்து வேறோர் உருவம் எடுக்கும் சக்தி படைத்த அவனுக்கு எந்த உருவத்தை நாம் கற்பிப்பது. அதனால் தான் மணிவாசகர் தெள்ளேணம் பதிகத்தின் முதல் பாடலில், ஓருருவம் ஒருநாமம் இல்லாதவன் என்று கூறுகின்றார்.

திருமாலும் பன்றியாய் சென்று உணராத் திருவடியை
உரு நாம் அறிய ஓர் அந்தணனாய் ஆண்டுகொண்டான்
ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லாற்கு ஆயிரம்
திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ

பொழிப்புரை

அடியார்களின் நம்பிக்கைக்கு உரியவன் என்பதால் அடியார்களால் மிகவும் விரும்பப் படுபவனும், வெண்மை நிறத்தில் காணப்படும் எருதினைத் தனது வாகனமாக ஏற்றுக் கொண்டு அதன் மீது உலவுவனும், அனைத்து உயிர்களுக்கும் தலைவனும், எப்போதும் வேத கீதங்களை பாடுபவனும், அனைவர்க்கும் இன்பத்தைத் தருபவனும், இமையாத மூன்று கண்களை உடையவனும், தன்னை விரும்பி வழிபடும் அடியார்களுக்கு என்றும் அன்புடையவனாக இருப்பவனும், அனலைக் கையில் ஏந்தி ஆடுபவனும், அவன் என்றும் இவன் என்றும் யாராலும் சுட்டிக் காட்டி அறிய முடியாதவனும், செம்பொன்னின் நிறத்தினை உடைய மேனியானும் ஆகியவன் சிவபெருமான். இத்தகைய பெருமைகளை உடைய பெருமான், முண்டீச்சரத்து தலத்தில் சிவலோகநாதன் என்ற பெயரில் உறைகின்றான். அவன் எனது சிந்தையிலும் பரவி இருக்கின்றான்.

Advertisement