23. கருமணியை கனகத்தின் - பாடல் 6
புகழாகிய ஒளியை உடையவனும், திரிபுரங்களையும் எரித்த தூயவனும், பொன் நிறம் பொதிந்த மேனியினை உடையவனும்,
பாடல் 6
புகழொளியை புரம் எரித்த புனிதன் தன்னைப் பொன்பொதிந்த
மேனியானைப் புராணன் தன்னை
விழவொலியும் விண்ணொலியும் ஆனான் தன்னை வெண்காடு
மேவிய விகிர்தன் தன்னைக்
கழலொலியும் கைவளையும் ஆர்ப்ப ஆர்ப்பக் கடைதோறும்
இடு பிச்சைக்கு என்று செல்லும்
திகழொளியைத் திருமுதுகுன்று உடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்தவாறே

விளக்கம்

விகிர்தன் = மற்றவர்களிடமிருந்து மாறுபட்டவன். கடை = கடைவாயில், வாயிற்படி; இந்த பாடலில் ஆகாயத்தின் பண்பு ஒலி என்பதை குறிப்பிடும் வண்ணம் விண்ணொலி என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். ஆகாயத்தின் பண்பு ஒலி எனப்படும் குணம் ஒன்று தான். காற்று ஒலி மற்றும் ஊறு ஆகிய இரண்டு பண்புகளையும், தீ ஒலி, ஊறு மற்றும் உருவம் ஆகிய மூன்று பண்புகளையும், தண்ணீர் ஒலி ஊறு உருவம் மற்றும் சுவை ஆகிய நான்கு பண்புகளையும் நிலம் ஒலி ஊறு உருவம் சுவை மற்றும் வாசனை ஆகிய ஐந்து பண்புகளையும் உடைத்ததாக விளங்குகின்றன. இந்த தன்மை, திருவாசகம் போற்றித் திருவகவல் பகுதியில் மணிவாசகரால் உணர்த்தப்படுகின்றது.

பாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
தீயிடை மூன்றாய் திகழ்ந்தாய் போற்றி
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி

மணிவாசகர் பாடியது போன்று, பஞ்ச பூதங்களின் தன்மையையும் எண்களையும் இணைத்து அப்பர் பிரான் புள்ளிருக்குவேளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் ஒரு பாடலில் (6.54.5) குறிப்பிடுகின்றார். கால் = காற்று. ஆற்ற நாள் = மிகுதியான நாட்கள். எஞ்சா = குறையாத, அழியாத. தஞ்ச = புகலிடம், தஞ்சமடையத் தகுந்த இடம். பாதுகாப்பு இல்லாத இடத்தில் தஞ்சம் அடைவதால், நமக்கு என்ன பாதுகாப்பு கிடைக்கும். அதனால் தான் அழவில்லாத இடமாகிய இறைவனின் திருப்பாதங்களில் நம்மை தஞ்சம் அடையுமாறு அப்பர் பிரான் இங்கே ஆலோசனை கூறுகின்றார்.

மின்னுருவை விண்ணகத்தில் ஒன்றாய் மிக்கு வீசும் கால் தன்னகத்தில் இரண்டாய்ச் செந்தீத்
தன்னுருவின் மூன்றாய்த் தாழ் புனலின் நான்காய்த் தரணிதலத்து அஞ்சாகி எஞ்சாத் தஞ்ச
மன்னுருவை வான் பவளக் கொழுந்தை முத்தை வளரொளியை வயிரத்தை மாசு ஒன்றில்லாப்
பொன்னுருவைப் புள்ளிருக்குவேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே

பொழிப்புரை

புகழாகிய ஒளியை உடையவனும், திரிபுரங்களையும் எரித்த தூயவனும், பொன் நிறம் பொதிந்த மேனியினை உடையவனும், அனைத்து உயிர்களுக்கும் பழமையானவனும், ஆகாயத்தின் பண்பாகிய ஒலியாகவும் திருவிழாக் காலங்களில் எழும் ஒலியாகவும் இருப்பவனும், திருவெண்காடு தலத்தில் உறையும் விகிர்தனும், காலில் அணிந்துள்ள வீரக் கழல்களின் ஒலியும் கையில் அணிந்துள்ள வளையல்களின் ஒலியும் கலந்து ஒலிக்க பல இல்லங்களுக்கும் பிச்சை கேட்டுச் செல்பவனும், மேன்மையான ஒளியுடன் திகழ்பவனும் ஆகிய மிகவும் பழமையான முதுகுன்றம் தலத்தில் உறையும் பெருமானை, நான் அறியாமல் திகைத்திருக்கும் நிலையில் என்னை எனது தீவினைகள் மிகவும் கொடியன அல்லவா.

Advertisement