முகப்பு
தினம் ஒரு தேவாரம்

51. ஊனினுள் உயிரை வாட்டி - பாடல் 4

திருச்செம்பொன்பள்ளி தலத்தில் உறையும்

Updated On : 3 மார்ச், 2017 at 6:18 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 4:21 PM

தந்தையும் தாயும் ஆகி தானவன் ஞானமூர்த்தி
முந்திய தேவர் கூடி முறைமுறை இருக்குச் சொல்லி
எந்தை நீ சரணம் என்று அங்கு இமையவர் பரவி ஏத்தச்
சிந்தையுள் சிவமதானார் திருச்செம்பொன் பள்ளியாரே
 

விளக்கம்

தானவன் = தானம் வழங்குபவன், கொடை வள்ளல்.

Advertisement

பொழிப்புரை

திருச்செம்பொன்பள்ளி தலத்தில் உறையும் சிவபெருமான், அனைவர்க்கும் தந்தையாகவும் தாயாகவும், அவர்கள் வேண்டியது அளிக்கும் கொடை வள்ளலாகவும், ஞான வடிவினராகவும் விளங்குகின்றார். மேம்பட்ட தேவர்கள் எல்லோரும் ஒன்றுகூடி, இருக்கு முதலாய நான்கு வேதங்களை முறையாக சொல்லி, பெருமானே, நாங்கள் உன்னிடம் சரணடைகின்றோம் என்று சிவபெருமானை புகழ்ந்து வணங்க, அவர்களின் சிந்தையில் சிவமாக, திருச்செம்பொன்பள்ளியில் உறையும் பெருமான் விளங்குகின்றார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.