55. பட்ட நெற்றியர் பாய்புலி - பாடல் 2
அடர்ந்தும் நீண்டும் காணப்படும் கூந்தலை
Updated On : 29 ஜனவரி, 2024 at 4:43 PM
துன்னு வார்குழலாள் உமையாளொடும்
பின்னு வார்சடை மேல் பிறை வைத்தவர்
மன்னுவார் மணஞ்சேரி மருந்தினை
உன்னுவார் வினை ஆயின ஓயுமே
விளக்கம்
துன்னு = அடர்ந்த, நெருங்கிய. உன்னுதல் = நினைத்தல். மன்னு = நிலைபெற்று இருத்தல். மன்னுவார் = நிலையாக இருத்தல்.
Advertisement
பொழிப்புரை
அடர்ந்தும் நீண்டும் காணப்படும் கூந்தலை உடைய பார்வதி தேவியுடன் கூடியவரும், ஒன்றோடொன்று பின்னி காணப்படும் நீண்ட சடையின் மேல் பிறையை வைத்தவரும், நிலைபெற்ற புகழினை உடைய தலமாகிய மணஞ்சேரி தலத்தில் உறைபவரும், நமது பிறவிப் பிணியினைத் தீர்க்கும் மருத்துவரும் ஆகிய பெருமானை நினைப்பவர்களின் வினைகள் அனைத்தும் ஒழியும்.