முகப்பு
தினம் ஒரு தேவாரம்

101. நின்று மலர் தூவி  - பாடல் 7

செல்வம் வந்தடையும்

Updated On : 11 ஜனவரி, 2019 at 11:30 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:38 PM


பாடல் 7:

    விடையான் முதுகுன்றை
    இடையாது ஏத்துவார்
    படையாயின சூழ
    உடையார் உலகமே

விளக்கம்:

Advertisement

இடையாது=இடைவிடாது; பதிகத்தின் இரண்டாவது பாடலில் பெருமானைத் தொழுவதால்  செல்வம் பெருகும் என்று கூறிய சம்பந்தர் அதற்கு அடுத்த பாடலில் அத்தகைய அடியார்கள் பால் உலகம் வசப்படும் என்று கூறியது போன்று, ஆறாவது பாடலில் செல்வம் வந்தடையும் என்று கூறிய சம்பந்தர் இந்த பாடலில் படை சூழ உலகத்து வேந்தராக மதிக்கப்படுவார்கள் என்று கூறுகின்றார். பெருமானை குறித்து செய்யப்படும் வழிபாடு செல்வம் மற்றும் வீரத்தினைப் பெற்றுத் தரும் என்று கூறுகின்றார்.

பொழிப்புரை:

இடபத்தினை வாகனமாகக் கொண்டுள்ள முதுகுன்றத்து இறைவனை இடைவிடாது புகழ்ந்து போற்றும் அடியார்கள், வலிமையான படைகள் உடையர்களாய் உலகத்தினை ஆட்சி செய்யும் தன்மையினை அடைவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.