முகப்பு
தினம் ஒரு தேவாரம்

97. மந்திர மறையவை - பாடல் 3

முனிவர்கள் நால்வர்க்கும்

Updated On : 1 ஜூலை, 2018 at 3:32 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:34 PM

பாடல் 3:

    பாலொடு நெய் தயிர் பலவும் ஆடுவர்
    தோலொடு நூலிழை துதைந்த மார்பினர்
    மேலவர் பரவு வெண்காடு மேவிய
    ஆலமது அமர்ந்த எம் அடிகள் அல்லரே

 
விளக்கம்:

ஆலம்=கல்லால மரம் மற்றும் நஞ்சு என்று இரண்டும் பொருத்தமான பொருளே. பெருமானை நஞ்சு சென்று அமர்ந்த கழுத்தினை உடையவன் என்றும் கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து சனகாதி முனிவர்கள் நால்வர்க்கும் அறம் உரைத்தவன் என்றும் கூறலாம். நூலிழை=பூணூல். மேலவர்=சிவஞானம் மிகுந்த அடியவர்கள். பலவும் ஆடுவர் என்பதற்கு, மற்ற பல பொருட்கள் என்று பொருள் கொண்டு, தேன் முதலியவற்றை குறிப்பிடுவதாகவும் பொருள் கொள்வார்கள். பதினொரு முறை ஸ்ரீருத்ரம் சொல்லி பெருமானை வழிபடும் முறையினில், பெருமானுக்கு எண்ணெய்க் காப்பிட்டு நீராட்டிய பின்னர், பஞ்சகவ்யம், பஞ்சாமிர்தம், தேன், நெய், பால், தயிர், கருப்பஞ்சாறு, பழரசம், இளநீர் மற்றும் சந்தனம் கொண்டு அபிடேகம் செய்வதும் வழக்கம். அடிகள்=தலைவர்

Advertisement

பொழிப்புரை:

பால், தயிர், நெய் முதலான பசுவிடமிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களையும் கொண்டு மிகுந்த விருப்பமுடன் நீராடும் பெருமானின் மார்பினில் தோலாடையும் பூணூலும் பொருந்தி உள்ளன. சிவஞானம் மிகுந்த அடியார்களால் துதிக்கப் படும் திருவெண்காடு தலத்தில் பொருந்தி உறையும் அவர், கல்லால் மரத்தின் கீழ் அமர்ந்து சனகாதி முனிவர்கள் நால்வர்க்கும் அறம் உரைத்தவர் ஆவார். அவர் எமது தலைவர் அல்லவா. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.