145. பரசு பாணியர் பாடல் - பாடல் 5
பல்லில் ஓட்டினர் பலி கொண்டு உண்பவர் பட்டினத்துறை பல்லவனீச்சரத்துஎல்லி ஆட்டுகந்தார் இவர் தன்மை அறிவாரார்
Updated On : 31 ஜனவரி, 2024 at 6:38 PM
பாடல் 5:
பல்லில் ஓட்டினர் பலி கொண்டு உண்பவர் பட்டினத்துறை பல்லவனீச்சரத்து
எல்லி ஆட்டுகந்தார் இவர் தன்மை அறிவாரார்
விளக்கம்:
Advertisement
பல்லில்=பல்+இல், பற்கள் இல்லாத, எல்லி=இரவு;
பொழிப்புரை:
பற்கள் ஏதும் இல்லாத உலர்ந்த மண்டையோட்டினை, தான் பலியேற்கச் செல்லும்போது தனது உண்கலனாக எடுத்துச் செல்லும் பெருமான், இரவில் நடனம் ஆடுவதை மிகவும் விரும்புகின்றார். இவர் காவிரிபூம்பட்டினத்து பல்லவனீச்சரம் தலத்தில் வீற்றிருந்து அருள் புரிகின்றார். இவரது தன்மை எத்தகையது என்பதை யாரால் அறிய முடியும்.