145. பரசு பாணியர் பாடல் - பாடல் 7
சடையினில் பிறைச்சந்திரனை
Updated On : 31 ஜனவரி, 2024 at 6:38 PM
பாடல் 7:
பைங்கண் ஏற்றினர் திங்கள் சூடுவர் பட்டினத்துறை பல்லவனீச்சரத்து
எங்குமா இருப்பார் இவர் தன்மை அறிவாரார்
விளக்கம்:
Advertisement
பைங்கண்=பசிய கண்; இளமையான கண்; ஏறு=எருது; அட்ட மூர்த்தியாக விளங்கும் பெருமான் இல்லாத இடம் உலகில் ஏது.
பொழிப்புரை:
பசுமையான கண்களை உடையவரும் எருதினை வாகனமாகக் கொண்டவரும் ஆகிய பெருமான் தனது சடையினில் பிறைச்சந்திரனை சூடியவர் ஆவார். எங்கும் நிறைந்த பரம்பொருளாக உள்ள இவர் காவிரிபூம்பட்டினத்து பல்லவனீச்சரம் தலத்தில் அமர்ந்து அருள் புரிகின்றார். இவரது தன்மை எத்தகையது என்பதை யாரால் அறிய முடியும்.