முகப்பு
தினம் ஒரு தேவாரம்

145. பரசு பாணியர் பாடல் - பாடல் 10

அருள் புரிகின்றார்

Updated On : 25 நவம்பர், 2019 at 12:00 AM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 6:38 PM


பாடல் 10:

பறை கொள் பாணியர் பிறை கொள் சென்னியர்
      பட்டினத்துறை பல்லவனீச்சரத்து
இறைவராய் இருப்பார் இவர் தன்மை அறிவாரார்

விளக்கம்:

Advertisement

பறை=மேற்புறம் தோலினால் இழுத்து கட்டப்பட்ட இசைக்கருவி;
 
பொழிப்புரை:

பறை எனப்படும் தோல் வாத்தியத்தை உடையவனாக விளங்கும் பெருமான், பிறைச் சந்திரனைத் தனது தலையிலே அணிந்துள்ளார். இவர் காவிரிபூம்பட்டினத்து பல்லவனீச்சரம் தலத்தில் அனைவர்க்கும் தலைவனாக அமர்ந்து அருள் புரிகின்றார். இவரது தன்மை எத்தகையது என்பதை யாரால் அறிய முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.