கண்டது
* (புதுச்சேரி புறநகர்ப் பகுதியிலுள்ள
ஓர் இடத்தின் பெயர்)
பத்துக் கண்ணு
- மா.உலகநாதன், திருநீலக்குடி.
* (பொன்னமராவதியில் ஒரு ப்ளக்ஸ் கடையில் கண்ட வாசகம்)
கண்ணுக்குத் தெரிந்த மனிதரை மதிக்காமல்,
கண்ணுக்குத் தெரியாத கடவுளை மதித்து பயன் இல்லை.
அ.கருப்பையா, பொன்னமராவதி.
* (பரமக்குடி அருகே உள்ள ஓர் ஊரின் பெயர்)
பொட்டிதட்டி
- கே.முத்துச்சாமி, தொண்டி.
கேட்டது
• (பாளையங்கோட்டை மார்க்கெட் அருகே
ஓர் உணவகத்தில் இரு நண்பர்கள்)
""என்ன மாப்பிள்ளை... என்னைக்கும் இல்லாத திருநாளா இன்னைக்கு இட்லி, சப்பாத்தி எல்லாம் வாங்கித் தர்ற?''
""ஆடி மாசம் வெள்ளிக்கிழமை அன்று பரதேசி ஒருவருக்கு இட்லியும், கெட்டி சட்னியும், சப்பாத்தியும் குருமாவும் வாங்கித் தந்தா குடும்பத்துக்கு நல்லதுன்னு எங்க குடும்ப ஜோசியர் சொன்னார். அதான் மச்சான்.''
கே.சரவணகுமார், திருநெல்வேலி.
• (வேலூர் சின்ன அல்லாபுரத்தில்
ஒரு வீட்டில் தந்தையும் மகனும்)
""டேய்... நாம மத்தவங்களுக்காக உதவி செய்யப் பிறந்திருக்கோம்''
""அப்ப... மத்தவங்களெல்லாம் எதுக்குப்பா பிறந்திருக்காங்க?''
வெ.ராம்குமார், வேலூர்.
யோசிக்கிறாங்கப்பா!
நகர்வது நம்முடைய ரயிலா,
பக்கத்து ரயிலா என்று தெரியாதது போலத்தான் இருக்கிறது...
மனைவி திட்டுவது குழந்தையையா?
நம்மையா? என்று.
அ.அன்புச்செல்வி, திருச்சி.
அப்படீங்களா!
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தைச் சேர்ந்த சிறுவன் டெய்லர் ரோஸன்தால். வயது 14. இளம் தொழில் முனைவன். இவன் தயாரித்த இந்த இயந்திரத்துக்கு 3 கோடி அமெரிக்க டாலர்கள் தருகிறேன் என்றார்கள். மறுத்துவிட்டான்.
பார்ப்பதற்கு ஏடிஎம் இயந்திரம் போல் இருக்கும் இந்த இயந்திரத்தில் இருந்து வெளியே வருவது பணம் அல்ல. காசு போட்டால் முதலுதவி மருந்துகள், பிளாஸ்திரி, இரப்பர் கையுறைகள்,பேண்டேஜ் துணி போன்றவை வெளியே வரும்.
எதற்காம் இந்த இயந்திரம்?
இடையில் எந்த ஊரும் இல்லாமல், சென்னை பாஷையில் சொல்வதானால் "ஜிலோ' என்றிருக்கும் வெட்ட வெளி சாலைகளில் ஏதேனும் விபத்து நடந்தால், அவசரமான முதல் உதவிகள் செய்ய எதுவும் இல்லாவிட்டால் என்ன செய்வது? மருந்துக்கடைகள் அருகில் இல்லாத விளையாட்டுத் திடல்கள், வணிக வளாகங்கள், கல்விக் கூடங்கள், சுற்றுலாத்தலங்கள் ஆகிய இடங்களில் இந்த இயந்திரத்தை நிறுவத் திட்டமிட்டிருக்கிறான் இந்தச் சிறுவன்!
என்.ஜே., சென்னை-69.
எஸ்எம்எஸ்
நாம் வாழும்போது
யாரைச் சிரிக்க வைக்கிறோமோ...
அவர்கள்தான் நாம்
இறக்கும்போது அழுகிறார்கள்.
நாம் வாழும்போது
யாரை அழ வைக்கிறோமோ...
அவர்கள்தான் நாம்
இறக்கும்போது சிரிக்கிறார்கள்.
ஆர்.ஜனனிரமணன், துறையூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.