வலைப்பூ

இப்படி பண்றீங்களேப்பா..

ஒரு மாலை நேரம். பூங்காவில் உலாவிக் கொண்டிருந்தனர் கணவனும் மனைவியும்.

DIN

ஒரு மாலை நேரம். பூங்காவில் உலாவிக் கொண்டிருந்தனர் கணவனும் மனைவியும்.

மனைவி, ""எனக்கு அடுத்த வாரம் பிறந்தநாள் வருது. ஞாபகம் இருக்கா?'' என்று கேட்டாள்.

""ஞாபகம் இல்லாமல் என்ன? ஒரு கிஃப்ட் கூட வாங்கித் தர ப்ளான் இருக்கு'' என்றான் கணவன்.

மனைவிக்கோ மகிழ்ச்சி. ""இப்படி ஏதாவது சர்ப்ரைஸ் கொடுப்பீங்கன்னு நினைச்சேன். என்ன கிஃப்ட்டுங்க?''என்று ஆர்வத்தை அடக்க முடியாமல் கேட்டாள் மனைவி.

""அடுத்த வாரம் சொல்றேனே...''

 ""இல்ல... இப்பவே சொல்லுங்க''

 ""சரி... அங்கே ஒரு அரசமரம் தெரியுதா?''

 ""அதுக்குக் கீழே நிறைய வண்டிகள் இருக்கு பாரு''

 ""லெஃப்ட்ல ஒரு ரெட் ஃபெராரி நிக்குதுல...''

 ""ஆமா.. ஆமா...''

 ""அந்தக் கலர்ல ஒரு இம்போர்டட்....''

 ""இம்போர்டட்...?''
 
""நெய்ல் பாலிஷ் பாட்டில் வாங்கித் தாரேன்'' என்றான் கணவன்.

-  க.சங்கர், நாகர்பாளையம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய டிஜிபிக்கு தகுதி பெறும் ஒன்பது போ் கொண்ட பட்டியலை யுபிஎஸ்சி-க்கு அனுப்பியது தமிழக அரசு

தொகுப்பு வீடு வழங்கக் கோரி மனு

பணியில் உள்ள ஆசிரியா்களுக்கு சிறப்பு தகுதித் தோ்வு: பள்ளிக் கல்வித் துறை ஆலோசனை

மழைக்கால மின்விபத்து உயிரிழப்புகள்!

இந்தியாவுக்கு 2024 வரை வந்த அண்டை நாட்டு சிறுபான்மையினா் ஆவணமின்றி தங்க அனுமதி: மத்திய அரசு

SCROLL FOR NEXT