Diwali celebration 
உலகத் தமிழர்

நியூயார்க் தமிழ்ச்சங்கம் நடத்திய தீபாவளிக் கொண்டாட்ட விழா

நவம்பர் 9, 2019 சனிக்கிழமை பிற்பகல் நியூயார்க் தமிழ்ச்சங்கம் தீபாவளிக் கொண்டாட்ட விழாவை நடத்தியது.

மகாலட்சுமி சுப்ரமணியன்

நவம்பர் 9, 2019 சனிக்கிழமை பிற்பகல் நியூயார்க் தமிழ்ச்சங்கம் தீபாவளிக் கொண்டாட்ட விழாவை நடத்தியது.

உமையாள் முத்து அவர்களின் சொற்பொழிவு, இலங்கை வானொலியின் முன்னாள் நிகழ்ச்சி அறிவிப்பாளர் அப்துல் அமீது அவர்களின் உரை மற்றும் "நியூயார்க் தமிழ்ச்சங்கத்தின் பாட்டுக்குப் பாட்டு" நிகழ்ச்சி, பின்னணி பாடகர் ஹரீஸ் ராகவேந்திரா, சூப்பர் சிங்கர் பாடகர்கள் மற்றும்  கனடா இசைக்குழுவினரின் மெல்லிசை, தீபாவளி விருந்து எனப் பல்சுவை நிகழ்ச்சிகள் நிறைந்த கோலாகல விழாவாக ஏறக்குறைய ஆறு மணி நேரம் நடைபெற்றது. 

* விழாவில் நியூயார்க் சண்முகம் பெரியசாமியின் அறிமுக உரையைத் தொடர்ந்து, சங்க ஆலோசகர் மருத்துவர் எம்.என்.கிருஷ்ணன் அவர்கள், புதுச்சேரி அகன் பதிப்பித்த மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்களின் 7 கவிதை நூல்களை வெளியிட்டார். (பிரபல தமிழ் நடிகை எம் என் ராஜத்தின் சகோதரர்  மருத்துவர் எம்என் கிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது).  

* இலங்கை அப்துல் ஹமீது, உமையாள் முத்து, நியூயார்க் தமிழ்ச் சங்கத் தலைவர் ரங்கநாதன் புருஷோத்தமன், நியூயார்க் தமிழ்ச்சங்க முன்னாள் தலைவர் காஞ்சனா பூலா ஆகியோர் நூல்களைப் பெற்றுக்கொண்டனர்.

* அமெரிக்க மண்ணில் தமிழகக் கவிஞர் ஒருவரின் 7 கவிதை நூல்களை வெளியிட்ட சிறப்பிடத்தை நியூயார்க் தமிழ்ச் சங்கம் பெற்றுள்ளது ! .

*ராம் மோகன், குமரப்பன் அண்ணாமலை, பாலா சுவாமிநாதன்  கதிர்வேல் குமாரராஜா உள்ளிட்ட சங்க நிர்வாகக் குழுவினர் மற்றும் ஆலோசனைக் குழுவினர் விழாவுக்கான ஏற்பாடுகளை மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக டிஜிபி சங்கா் ஜிவாலுக்கு இன்று பணி நிறைவு விழா

பிளஸ் 2 மாணவி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

சத்திரம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஆட்சியரிடம் பாமக மனு

தில்லி பல்கலை.யின் 67 கல்லூரிகளுக்கு மீண்டும் யு-ஸ்பெஷல் பேருந்துகள் சேவை: முதல்வா் ரேகா குப்தா தொடங்கிவைத்தாா்

இளைஞா் கத்தியால் குத்தி கொலை: 4 போ் கைது

SCROLL FOR NEXT