பிப்ரவரி
14:: 470 பயணிகள் விமானங்களை வாங்குவதற்காக ஏர்பஸ், போயிங் நிறுவனங்களுடன் டாடா குழுமத்தின் ஏர் இந்தியா நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டது. இது உலகின் மிகப் பெரிய விமானக் கொள்முதலாகும்.
ஜூன்
23:: பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவுக்கும் அந்த நாட்டுக்கும் இருந்த 6 வர்த்தகப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்பட்டது.
24:: இந்தியாவின் எண்மமயமாக்கல் திட்டத்தில் 1,000 கோடி டாலர் (சுமார் ரூ.83,000 கோடி) முதலீடு செய்யும் திட்டத்தை கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அறிவித்தார்.
ஜூலை
17:: பாதுகாப்புத் துறை அமைச்சகத்திடமிருந்து ரூ.800 கோடி மதிப்பிலான கொள்முதல் ஒப்பந்தத்தை ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட் பெற்றது.
24:: ட்விட்டரின் இலச்சினை மற்றும் வணிகப் பெயரை "எக்ஸ்' என்று மாற்றினார் அந்த சமூக ஊடக நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க்.
ஆகஸ்ட்
14:: மத்திய அரசின் சுயசார்பு திட்டத்தின் பலனாக, செல்லிடப் பேசி தயாரிப்பில் சீனாவுக்கு அடுத்தபடியாக உலகின் மிகப் பெரிய செல்லிடப் பேசி தயாரிப்பு மையம் என்ற பெருமையை இந்தியா அடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.