கோப்புப்படம் 
Year Ender

2025-ஆம் ஆண்டுக்கான விருதுகள்...

கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருது வழங்கப்பட்டது.

இணையதளச் செய்திப் பிரிவு

ஜனவரி

1 கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருது வழங்கப்பட்டது.

பிப்ரவரி

2 சென்னையில் பிறந்தவரும், இந்திய வம்சாவளி அமெரிக்கருமான சந்திரிகா டாண்டன் "திரிவேணி' இசை ஆல்பத்துக்காக முதல்முறையாக கிராமி விருது வென்றார்.

மார்ச்

2 97-ஆவது ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் "அனோரா' திரைப்படம் 5 விருதுகளை வென்றது.

22 59-ஆவது ஞானபீட விருதுக்கு ஹிந்தி கவிஞரும், நாவலாசிரியருமான வினோத்குமார் சுக்லா தேர்வு.

ஏப்ரல்

28 பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 71 பேருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பத்ம விருதுகளை வழங்கினார்.

மே

20 கன்னட எழுத்தாளர் பானு முஸ்தாக்கின் "ஹார்ட் லேம்ப்' சிறுகதை நூல் சர்வதேச புக்கர் பரிசை வென்றது.

ஆகஸ்ட்

2 உடல் உறுப்பு தானத்துக்காக 8-ஆவது முறையாக "சிறந்த மாநில விருது' தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்டது.

31 "எஜுகேட் கேர்ள்ஸ்' என்ற இந்திய அமைப்புக்கு ரமோன் மகசேசே விருது அறிவிப்பு.

செப்டம்பர்

23 ஹிந்தி நடிகர்கள் ஷாருக் கான், ராணி முகர்ஜி உள்ளிட்டோருக்கு தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டன. மலையாள நடிகர் மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது அளிக்கப்பட்டது.

அக்டோபர்

6 மருத்துவத்துக்கான நோபல் பரிசு மேரி பிரன்கோ, ஃபிரெட் ராம்ஸ்டெல், ஷிமோன் சககுச்சி ஆகியோருக்கு அறிவிப்பு.

7 இயற்பியலுக்கான நோபல் பரிசு ஜான் கிளார்க், மிஷெல் டெவோரெட், ஜான் மார்டினிஸ் ஆகியோருக்கு அறிவிப்பு.

9 இலக்கியத்துக்கான நோபல் பரிசு ஹங்கேரி எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னஹோர்காய்க்கு அறிவிப்பு.

10 அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிப்பு.

11 பல்வேறு துறைகளைச் சேர்ந்த 90 கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்தார்.

13 பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு ஜோயல் மோகிர், ஃபிலிப் அகியோன், பீட்டர் ஹோவிட் ஆகியோருக்கு அறிவிப்பு.

நவம்பர்

10 "ஃபிளெஷ்' நாவலுக்காக பிரிட்டிஷ் எழுத்தாளர் டேவிட் ஸாலே புக்கர் பரிசை வென்றார்.ற

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT