Year Ender

உலகம் 2025

உக்ரைன் வழியாக எரிவாயு விநியோகிப்பதை ரஷியா நிறுத்தியது. இது ஐரோப்பிய நாடுகளில் எரிசக்தி பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.

இணையதளச் செய்திப் பிரிவு

ஜனவரி

1: உக்ரைன் வழியாக எரிவாயு விநியோகிப்பதை ரஷியா நிறுத்தியது. இது ஐரோப்பிய நாடுகளில் எரிசக்தி பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.

15: 15 மாத போருக்குப் பிறகு இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. 19-ஆம் தேதி அமலுக்கு வந்த அந்தப் போர் நிறுத்தத்தில் இரு தரப்பினரும் பல கைதிகளைப் பரிமாறிக்கொண்டனர்.

20: அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் (78) இரண்டாவது முறையாகப் பதவியேற்றுக் கொண்டார். முதல் நாளில் இருந்தே குடியேற்றக் கட்டுப்பாடுகள் போன்ற தனது கொள்கைகளை முன்பைவிட அதிக தீவிரத்துடன் அவர் செயல்படுத்தத் தொடங்கினார்.

27: மிகவும் மலிவான செயற்கை நுண்ணறிவு (ஏஐ) செயலியை வெளியிட்டு சீனா உலக சந்தையில் அதிர்வலையை ஏற்படுத்தியது.

பிப்ரவரி

5: உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைக்காக அமெரிக்காவும் ரஷியாவும் தூதரகங்களை மீண்டும் திறக்க ஒப்புக்கொண்டன.

மார்ச்

1. அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப்- உக்ரைன் அதிபர் ùஸலென்ஸ்கி இடையே ரஷிய போர் நிறுத்தம் தொடர்பான விவாதம் கடும் வார்த்தை மோதலாக மாறியது. போரை எதிர்கொள்ள செய்த உதவிக்கு கைம்மாறாக உக்ரைன் கனிமவளங்களை அமெரிக்காவுக்கு வழங்கும் ஒப்பந்தத்தில் கையொப்பமிடாமல் வெளியேறினார் ùஸலென்ஸ்கி.

8: சிரியாவில் அதிபர் பதவியில் இருந்து அகற்றப்பட்ட அல்-அஸாத் சார்ந்த அலாவி இனத்தவருக்கு எதிராக அரசு ஆதரவு படையினர் நடத்திய தாக்குதலில் 1,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.ஏப்ரல்

18: காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிக்க கத்தார், எகிப்து, அமெரிக்கா மேற்கொண்ட முயற்சி தோல்வடைந்தது. காஸாவில் இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல்களை தொடங்கி 591 பேரை கொன்றது.

28: மியான்மரில் 7.7 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டு 5,413 பேர் உயிரிழந்தனர்; 11,402 பேர் காயமடைந்தனர்.ப்ரல்

மே

7: புதிய கத்தோலிக்க தலைமை மதகுருவாக வட அமெரிக்காவைச் சேர்ந்த மதகுரு ராபர்ட் பிரெவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டார். போப் 14-ஆம் லியோ என்ற பெயரை அவர் தேர்ந்தெடுத்தார்.

12: துருக்கியில் சுமார் 30 ஆண்டுகளாக அரசை எதிர்த்துப் போரிட்டு வந்த குர்து பிரிவினைவாதக் குழுவான பிகேகே, ஆயுதங்களை கைவிட்டு, கலைக்கப்பட்டது.

ஜூன்

1: ரஷியாவுக்குள் உக்ரைன் ராணுவ உளவுத் துறை மேற்கொண்ட "ஸ்பைடர்வெப்' நடவடிக்கையில் 40 ரஷிய போர் விமானங்கள் மீது ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.

13: ஈரான் அணுசக்தி மையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதுடன், அந்த நாட்டின் சக்திவாய்ந்த துணை ராணுவப் படை தளபதி ஹுசைன் சலாமி உள்பட முக்கிய தளபதிகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்திக் கொன்றது; ஈரானும் சரமாரி ஏவுகணைத் தாக்குதல் மூலம் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்தது.

18: இஸ்ரேல்-ஈரான் மோதலில் அமெரிக்காவும் இணைந்து, ஈரான் அணுசக்தி மையங்கள் மீது சக்திவாய்ந்த ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியது.

23: அமெரிக்காவுக்கு பதிலடியாக கத்தார், இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.

ஜூலை

13: சிரியாவின் தெற்குப் பகுதியில் சிறுபான்மை துரூஸ் இனத்தவருக்கும், பெதூயின் அரபு பழங்குடிகளுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. அதன் தொடர்ச்சியாக, பாலஸ்தீனத்தில் தங்களுக்கு உதவியதாகக் கூறப்படும் துரூஸ் இனத்தவருக்கு ஆதரவாக சிரியாவில் இஸ்ரேல் பல முறை தாக்குதல் நடத்தியது.

24: நீண்ட காலமாக எல்லை பிரச்னை இருந்துவரும் தாய்லாந்துக்கும், கம்போடியாவுக்கும் இடையே எல்லையில் ஆயுத மோதல் ஏற்பட்டு 39 பேர் உயிரிழந்தனர்.

ஆகஸ்ட்

8 நகோர்னோ-கராபக் விவகாரத்தில் 37 ஆண்டுகளாக நீடித்து வந்த பகையை முடிவுக்குக் கொண்டுவந்து, ஆர்மீனியாவும் அஜர்பைஜானும் அமைதி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன.

31 ஆப்கானிஸ்தான் கிழக்குப் பகுதியில் 6.0 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டு 2,200 பேர் உயிரிழந்தனர்; 3,500 பேர் காயமடைந்தனர்.

31 சூடானின் மத்திய டார்பூர் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு 1,000 பேர் வரை உயிரிழந்ததாக ஊடகங்கள் தெரிவித்தன.

செப்டம்பர்

8: நேபாளத்தில் சமூக வலைதளங்கள் தடை செய்யப்பட்டதைக் கண்டித்து "ஜென் இஸட்' இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் கொல்லப்பட்டனர். செப். 9-இல் பிரதமர் கே.பி.சர்மா ஒலி ராஜிநாமா செய்தார். இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி செப். 12-இல் பதவியேற்றார்.

9. அரசுக்கு எதிரான போராட்ட வன்முறையில் நேபாள நாடாளுமன்றம் தீக்கிரையானது.

9: உக்ரைன் போரில் முதல் முறையாக ரஷியாவின் ட்ரோன் ஒன்று

நேட்டோ உறுப்பு நாடான போலந்து வான் எல்லைக்குள் நுழைந்து பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

16: காஸாவில் பாலஸ்தீனர்களுக்கு எதிரான இன அழிப்பை இஸ்ரேல் நடத்துவதாக ஐ.நா. ஆணையம் உறுதிப்படுத்தியது.

19: மற்றொரு நேட்டோ உறுப்பு நாடான எஸ்டோனியாவின் வான் எல்லைக்குள்ளும் ரஷிய போர் விமானங்கள் நுழைந்தது நேட்டோவுக்கும், ரஷியாவுக்கும் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்தது.

21: பாலஸ்தீனத்தை தனி சுதந்திர நாடாக பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கீகரித்தன. பாலஸ்தீன பிரச்னைக்கான ஒரே தீர்வாக இந்தியா உள்ளிட்ட நாடுகள் கருதும் "இரு தேச' தீர்வுக்கு இது ஒரு முக்கிய படியாகக் கருதப்படுகிறது. இதைப் பின்பற்றி பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்தன.

அக்டோபர்

9: அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்வைத்த காஸா போர் நிறுத்த திட்டத்தின் முதல் கட்டத்தை அமல்படுத்த இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பும் ஒப்புக்கொண்டன.

9: ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல் உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலையடுத்து இருநாட்டுக்கு இடையே மோதல் வெடித்தது. இதில் இருதரப்பிலும் சேர்த்து நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

13: போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக தங்களிடம் உயிருடன் இருந்த கடைசி 20 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது; இஸ்ரேலும் 250 பாலஸ்தீன கைதிகளை விடுவித்தது.

21: ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே தகாய்ச்சியை நாடாளுமன்றம் தேர்ந்தெடுத்தது.

26: சூடான் ராணுவத்துடன் உள்நாட்டுச் சண்டையில் ஈடுபட்டுவரும் துணை ராணுவப் படையான ஆர்எஸ்எஃப், எல்-பாஷிர் நகரில் பொதுக்கள் 2,500 பேரைப் படுகொலை செய்தனர்.

நவம்பர்

17: வங்கதேசத்தில் மாணவர் போராட்டம் காரணமாக ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் போராட்ட அடக்குமுறைக்காக மரண தண்டனை விதித்தது.

27: சென்யார் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழை, வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியாவில் 1,390 பேர் உயிரிழந்தனர்.

டிசம்பர்

10: உலகிலேயே முதல் முறையாக 16 வயதுக்குள்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு ஆஸ்திரேலியா விதித்த தடை அமலுக்குவந்தது.

18. வங்கதேசத்தில் மர்ம நபர்களால் சுடப்பட்ட மாணவர் தலைவர் உஸ்மான் ஹாதி சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழப்பு. இதன் பின்னணியில் மத நிந்தனையில் ஈடுபட்டதாக ஹிந்து மதத்தைச் சேர்ந்த தொழிலாளி தீபு சந்திர தாஸ் கும்பலால் கொடூரமாக அடித்துக் கொலை.

24: டிரம்ப்பின் அமைதி திட்டத்தில் கூறப்பட்டுள்ளதற்கு மாறாக, காஸாவிலிருந்து இஸ்ரேல் முழுமையாக வெளியேறாது என்பதை இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

25. வங்கதேச முன்னாள் பிரதமர் கலீஜா ஜியா மகனும், பிஎன்பி கட்சியின் செயல் தலைவருமான தாரிக் ரஹ்மான் 17 ஆண்டுகளுக்குப் பிறகு லண்டனிலிருந்து வங்கதேசம் திரும்பினார். 2026-இல் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் கட்சியின் பிரதமர் வேட்பாளராக அவர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

26: தாய்லாந்து - கம்போடியா இடையே இந்த மாதம் தொடங்கி, வாரக்கணக்கில் நீடித்த மோதலில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டதற்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே புதிய போர் நிறுத்த ஒப்பந்தம் கையொப்பமானது.

28: ரஷியாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான 20 அம்ச அமைதித் திட்டத்தை இறுதி செய்வதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி நேரில் சந்தித்தார். ஐரோப்பிய தலைவர்களுடனும் அவர்கள் இருவரும் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

பாண்டிய நாட்டுப் பிரதானிகள்

முறைசெய்து காப்பாற்றும் முதலமைச்சர் எல்லார்க்கும் எல்லாம்

SCROLL FOR NEXT