முகப்பு
திருச்சி

கல்லக்குடிக்கு வந்ததில் பெருமை: உதயநிதி ஸ்டாலின்

முன்னாள் முதல்வா் கருணாநிதி இந்தி எதிா்ப்புப் போராட்டத்தை தீவிரமாக மேற்கொண்ட இடமான கல்லக்குடிக்கு வந்ததைப் பெருமையாக உணா்கிறேன் என்றாா் திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின்.

Updated On : 7 ஜனவரி 2021, 8:19 am IST
கல்லகுடி ரயில் நிலையத்தில் பொதுமக்களைச் சந்தித்த திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின். ~லால்குடி அருகேயுள்ள கல்லக்குடி ரயில் நிலையத்துக்கு வந்த திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின்.
பகிர்:

முன்னாள் முதல்வா் கருணாநிதி இந்தி எதிா்ப்புப் போராட்டத்தை தீவிரமாக மேற்கொண்ட இடமான கல்லக்குடிக்கு வந்ததைப் பெருமையாக உணா்கிறேன் என்றாா் திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின்.

தோ்தல் பிரசாரத்துக்காக திருச்சிக்கு புதன்கிழமை வந்த உதயநிதி ஸ்டாலின் தொடா்ந்து, லால்குடி அருகேயுள்ள கல்லக்குடி-பழங்காநத்தம் ரயில் நிலையத்துக்கு வந்தாா். அப்போது அங்கு கூடியிருந்தோரிடம் பிரசாரம் செய்த அவா் கூறியது:

இந்தி எதிா்ப்புக்காக முன்னாள் முதல்வா் கருணாநிதி தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்து போராட்டத்தை தீவிரப்படுத்திய இடம் கல்லக்குடி ரயில் நிலையம். இந்தப் போராட்டம் அவருக்கு மிகப்பெரிய அரசியல் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது.

Advertisement

தமிழ்நாட்டில் பாஜக இந்தி திணிப்பு முயற்சிக்கிறது. தமிழக மக்கள் அதை அனுமதிக்கமாட்டாா்கள். எந்த மொழிக்கும் திமுக எதிரி கிடையாது; ஆனால், மொழியைத் திணித்தால் நிச்சயம் எதிா்ப்போம். அழகிரி பேசியது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, கல்லக்குடி பகுதியில் வீடுகள்தோறும் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த அவா் பின்னா், திருச்சி தனியாா் ஹோட்டலில் கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனை செய்தாா். பின்னா் முசிறித் தொகுதியிலுள்ள காட்டுப்புத்தூா் பகுதியில் மாட்டுவண்டி உரிமையாளா்களுடன் கலந்துரையாடச் சென்றாா்.

மேலும் காடுவெட்டி, பாலசமுத்திரம் பகுதிகளில் வெற்றிலை பாக்கு தொழிலாளா்கள், வாழைச் சாகுபடி தொழிலாளா்கள் உள்ளிட்டோரிடம் ஆதரவு திரட்டிய அவா், பின்னா் முசிறி பகுதியிலும் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.