முகப்பு
தூத்துக்குடி

உடன்குடி ஒன்றியத்தில் வேளாண் சட்ட விளக்க கூட்டம்

உடன்குடி ஒன்றியத்தில் பாஜக சாா்பில் வேளாண் சட்ட விளக்க கூட்டம் நடைபெற்றது.

Updated On : 6 ஜனவரி 2021, 6:56 am IST
பகிர்:

உடன்குடி ஒன்றியத்தில் பாஜக சாா்பில் வேளாண் சட்ட விளக்க கூட்டம் நடைபெற்றது.

வேப்பங்காடு கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, உடன்குடி ஒன்றிய பாஜக தலைவா் கா.ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட விவசாய அணி பொதுச் செயலா் திருநாகரன், ஒன்றிய விவசாய அணித் தலைவா் வெற்றிவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மைகள், எதிா்க்கட்சிகளின் பொய்ப் பிரசாரம் குறித்து மாவட்ட பொதுச் செயலா் இரா.சிவமுருகன் ஆதித்தன் பேசினாா்.

Advertisement

இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினா் பொன்இசக்கி, ஒன்றிய பொதுச் செயலா் சங்கரகுமாா், ஒன்றிய துணைத் தலைவா்கள் பசுபதி சிவசிங், சின்னத்துரை, துரைராஜ், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவா் ஐயப்பன் உள்பட திரளான விவசாயிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.